வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்.. வானிலை மையம் எச்சரிக்கவே இல்லையே! ஒரே நாளில் கொட்டிய 27 செமீ மழை
விழுப்புரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மழை பொழிவு இருக்கும் மாவட்டங்கள் பட்டியலில் விழுப்புரம் இல்லாத நிலையில், அங்கு ஒரே நாளில் 27 செமீ மழை பொழிந்து வெள்ளக்காடாக மாறி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் குறிப்பாக விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்து இருக்கிறது.

இந்த மழை பொழிவு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "BASL மணம்பூண்டி (விழுப்புரம்) 27, RSCl-2 சூரப்பட்டு (விழுப்புரம்) 21, BASL முகையூர் (விழுப்புரம்) 20, RSCL-2 கேதார் (விழுப்புரம்) 15, வேலூர் 9, RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 8, BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 7, மரக்காணம் (விழுப்புரம்), விழுப்புரம், RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 6, KCS மில் அரியலூர் (கள்ளக்குறிச்சி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) தலா 5, காட்பாடி (வேலூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), DSCL மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி), அம்முண்டி (வேலூர்), வானூர் (விழுப்புரம்), KCS Mill-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), RSCL-2 கஞ்சனூர் (வில்லிபுரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 4, செஞ்சி (விழுப்புரம்), RSCL-2 நெமூர் (விழுப்புரம்), பணப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஆற்காடு (இராணிப்பேட்டை), புழல் ARG (திருவள்ளூர்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), KCS Mill-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), ராணிப்பேட்டை, ஆம்பூர் (திருப்பத்தூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), பென்னாகரம் (தருமபுரி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 3, ஆரணி (திருவண்ணாமலை), கல்லிக்குடி (மதுரை), சோழிங்கநல்லூர் (சென்னை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), அம்மூர் (வாலாஜா ரயில்வே) (இராணிப்பேட்டை), சென்னை விமான நிலையம், தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), தானியமங்கலம் (மதுரை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), ஆலந்தூர் (சென்னை), பொன்னை அணை (வேலூர்), திருமங்கலம் (மதுரை), புதுச்சேரி, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), சேட்பேட்டை (திருவண்ணாமலை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சோளிங்கர் (இராணிப்பேட்டை), கூடலூர் பஜார் (நீலகிரி), பாலர் அணைக்கட்டு (இராணிப்பேட்டை), மானாமதுரை (சிவகங்கை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), தருமபுரி PTO, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), RSCL வல்லம் (விழுப்புரம்), மேல் கூடலூர் (நீலகிரி), காஞ்சிபுரம், மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு) தலா 2, ஆண்டிபட்டி (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), திருவண்ணாமலை, RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), மின்னல் (ராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), காரியாபட்டி (விருதுநகர்), குடியாத்தம் (வேலூர்), பார்வூட் (நீலகிரி), சென்னை நுங்கம்பாக்கம், விருதுநகர், திண்டிவனம் (விழுப்புரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), செங்கல்பட்டு, YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 1 சென்டி மீட்டர் அளவு மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மணம்பூண்டியில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த 27 செமீ மழையின் காரணமாக அங்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையே நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது." என்றே தெரிவிக்கப்பட்டு இருந்த்து. இதில் விழுப்புரத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவிக்கவில்லை. ஆனால், அதிகபட்ச மழை பொழிவே அங்குதான் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications