விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கன்னத்தில் "பளார்னு" அறை விட்ட இன்ஸ்பெக்டர்! தர்ணா செய்த மாணவரை அடித்து தாக்கி.. வெளியான பரபர வீடியோ

சாதி சான்றிதழ் கேட்டு தர்ணா செய்த மாணவனை தாக்க உள்ளார் இன்ஸ்பெக்டர்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த அதிகாரியை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை, பளார் என கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர், தரதரவென அடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Recommended Video

    கன்னத்தில் பளார்னு அறை விட்ட இன்ஸ்பெக்டர்! தர்ணா செய்த மாணவரை அடித்து தாக்கி.. வெளியான பரபர வீடியோ

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியை கல்லூரி மாணவர் மகேந்திரா.. இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

    காட்டு நாயக்கர் ஜாதி சான்றிதழை கேட்டு, 5-ம் வகுப்பு முதல் தொடர்ந்து பலமுறை மனு கொடுத்தபடியே இருந்துள்ளார்.. ஆனால், சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என தெரிகிறது.

     Exclusive: கலெக்டர் ஆபிசில் ஜோதிமணி MP தர்ணா; கண்டுகொள்ளாத செந்தில்பாலாஜி; கரூரில் என்ன நடக்கிறது? Exclusive: கலெக்டர் ஆபிசில் ஜோதிமணி MP தர்ணா; கண்டுகொள்ளாத செந்தில்பாலாஜி; கரூரில் என்ன நடக்கிறது?

    விழுப்புரம்

    விழுப்புரம்

    அதனால், 10 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கலெக்டர் மோகன் அவர்களை சந்தித்து மாணவர் மீண்டும் மனு கொடுத்துள்ளார்... அந்த மனுவை கலெக்டர் உடனடியாக பரிசீலித்தார்.. விழுப்புரம் ஆர்டிஓவை அழைத்து கல்லூரி மாணவர்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு, வரும் 31ம் தேதிக்குள் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    சான்றிதழ்

    சான்றிதழ்

    இதன்காரணமாக, கடந்த 30-ம் தேதி காலை முதல் ஆர்டிஓ அலுவலகத்தில் சான்றிதழுக்காகவும் மகேந்திரா காத்திருந்தார்.. ஆனால், அதிகாரிகள் அவரை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.. இரவு நேரம் வந்த அதிகாரிகள், உனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க முடியாது, உன்னுடைய தாத்தா உள்ளிட்ட முன்னோர்களின் சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் வழங்க முடியும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

    வேதனை

    வேதனை

    இதனால், வேதனை அடைந்த கல்லூரி மாணவன் மகேந்திரா விழுப்புரம் கலெக்டர் ஆபீஸ் நுழைவாயிலில் தனிநபராக உட்கார்ந்து, ஜாதி சான்றிதழ் கிடைக்கும் வரை தர்ணா செய்ய போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்... மாணவர் தர்ணா செய்வதாக தகவல் பறக்கவும், போலீசாரும் விரைந்து வந்து, மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அப்போது அந்த வழியாக சென்ற, எஸ்பி அலுவலகத்தின் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கணபதி, மாணவனை தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்..

     அடி, உதை

    அடி, உதை

    பின்னர் கன்னத்தில் பளார் என அறைந்து, அடித்து உதைத்து தரதரவென அங்கிருந்து இழுத்து சென்றார். அங்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போலீசார் உட்பட பொதுமக்கள் அனைவருமே இதை அதிர்ந்து போய் பார்த்தனர்.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. நடந்த சம்பவம் குறித்து மகேந்திரா சொன்னதாவது:

    மாணவன்

    மாணவன்

    "நான் 5-ம் வகுப்பு படிக்க தொடங்கியது முதலே காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருகிறேன்.. அதற்காக தொடர்ந்து போராடியும் வருகிறேன்... எனக்கு பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், உதகை இருந்து ஆராய்ச்சி வல்லுனர்கள் எனக்கு மானுடவியல் அறிக்கை வழங்கியுள்ளனர்.. இதில் நான் காட்டுநாயக்கன் ஜாதியை சேர்ந்தவர் என்பது அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

     கலெக்டர் உத்தரவு

    கலெக்டர் உத்தரவு

    இதனை வைத்து பலமுறை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கோரி மனு அளித்தேன்.. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. எனவே, 10 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கலெக்டர் மோகன் அவர்களை சந்தித்து மனு கொடுத்தேன்.. அந்த மனுவை கலெக்டர் உடனடியாக பரிசீலித்தார்.. விழுப்புரம் ஆர்டிஓவை அழைத்து கல்லூரி மாணவர்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு வரும் 31ம் தேதிக்குள் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனால்தான், 15 நாட்களாக ஆர்டிஓ அலுவலகத்தில் காலை முதல் இரவு வரை அங்கேயே காத்திருக்கிறேன்..

    சஸ்பெண்ட்

    சஸ்பெண்ட்

    கலெக்டர் உத்தரவிட்டும் எங்களை நாயை விட கேவலமாக அதிகாரிகள் நடத்தினார்கள்.. இந்த 15 நாட்களாக ஜாதி சான்றிதழ் கொடுக்க முடியாமல் காலேஜுக்கும் என்னால் செல்ல முடியாத நிலைமை உள்ளது.. இதைகூட புரிந்து கொள்ளாமல், என்னை அந்த இன்ஸ்பெக்டர் அடித்து இழுத்து சென்றுவிட்டார்" என்று கண்ணீருடன் கூறினார். இதனிடையே, மாணவனை கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர் கணபதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாண்டியன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.. இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Villupuram College student dharna for caste certificate and action against Police Inspector
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X