சிறுமியை கண்டுபிடிக்காத சிங்கப்பெண்கள் பாதுகாப்புப்படை! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சிறுமிகள், பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை இருந்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாதது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போயிருக்கிறார்.

girl Singappenngal Force police

சிறுமியை கண்டுபிடிக்க 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு 10வது நாளாக தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் காவல்துறைக்கு சிசிடிவி கேமராக்கள், செல்போன் அழைப்புகள்தான் குற்றவாளிகளை அடையாளம் காண உதவியாக இருக்கும்.

ஆனால், இந்த வழக்கில் மேற்குறிப்பிட்ட இரண்டும் காவல்துறைக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இருப்பினும் சந்தேகத்திற்கிடமான 20 நபரக்களை பிடித்து விசாரித்தனர். இதுவரை எந்த விவரமும் கிடைக்கவில்லை. சிறுமி எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்? உயிருடன் இருக்கிறாரா? கடத்தியது யார்? உள்ளூர் நபர்களா? மாஃபியா கும்பலா? எதற்காக கடத்தப்பட்டார்? என பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

ஒருவேளை சிறுமி கடத்தப்படு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில், ஆலம்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மலைப் பகுதிகள், கரும்பு தோட்டங்கள், நீர் நிலைகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அடுத்தடுத்த கிராமங்களுக்கும் இந்த தேடுதல் பணிகள் விரிவுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றன. சிறுமி மாயமாகி 10 நாட்கள் ஆன நிலையில், தற்போது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருக்கிறார்.

சிங்கப்பெண்கள் அதிரடிப்படை எங்கே?

பெண்கள், சிறுமிகள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண்கள் அதிரடிப்படை உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இந்த வழக்கில் சிங்கபெண்கள் போலீசாரின் பங்களிப்பு என்ன? என்பது குறித்து வெளிப்படையாக அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த வழக்கு மட்டும் கிடையாது, இதற்கு முன்னர் பல சம்பவங்களில் சிங்கப்பெண்கள் பாதுகாப்புபடையினரால் பெரிய அளவில் தலையீடு செய்ய முடியாத சூழல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உதாரணமாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே, பள்ளி ஆசிரியர் வைகறைவாணன் என்பவரின் மனைவி, தன்னை வைகறைவாணன் கொடுமைப்படுத்துவதாக சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினரிடம் போன் செய்து முறையிட்டதாகவும், ஆனால் அவர்கள் கண்டுக்ககொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இப்படி இருக்கையில் தற்போது சிறுமி காணாமல் போன வழக்கிலும், சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படையினரின் பணிகள் குறித்து கேள்வி எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+