விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் ஷாக்.. 20 அடிக்கு புதைந்த பாலம்! மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!
விழுப்புரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், பாலம் சுமார் 20 அடி ஆழத்திற்கு புதைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ரூ.6431 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசால் கட்டப்பட்டு வந்த தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்த பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாலம் சரிந்திருப்பது, பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலம் மண்ணில் புதைந்ததால், விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நள்ளிரவு நேரத்தில் பாலத்தில் ஏற்பட்ட சேதத்தைக் கண்டறிந்து, உடனடியாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை எச்சரித்து, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாலத்திற்கு மிக அருகில் வசித்து வந்த சுமார் 25 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பாலம் தொடர்ந்து ஆழத்திற்குப் புதைந்து வருவதால், தரமற்ற கட்டுமானப் பணிகளும் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட வேலைகளுமே இந்த சேதத்திற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகள் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்தை நிறுத்திவைத்து, நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த பாலம் தற்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென சேதமடைந்திருப்பது, கட்டுமான பணிகள் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications