வந்தோமா.. சட்டுபுட்டுன்னு சுட்டுட்டு தப்பிச்சோமான்னு இல்லாமல்.. சாவகாசமாக ஊஞ்சல் ஆடிய திருடன்!
திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிவிட்டு சென்றுள்ளார் ஒரு திருடன்
Recommended Video
விழுப்புரம்: வந்தோமா.. சட்டுபுட்டுன்னு திருடிட்டு தப்பிச்சு ஓடினோமான்னு இல்லாமல்.. திருட வந்த இடத்தில்.. சாவகாசமாக ஊஞ்சல் ஆடிட்டு விட்டு போயுள்ளார் ஒரு திருடன்!
விழுப்புரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் உள்ளது சுதாகர் நகர். இங்கு அடிக்கடி வீட்டிலுள்ள பொருட்கள் காணாமல் போயுள்ளது.
இத்துடன் பெட்ரோலையும் யாரோ களவாடிட்டு போயிடுறாங்களாம். இதனால் அந்த பகுதி மக்கள் போலீசில் புகார் தந்திருந்தனர். இது சம்பந்தமாக போலீசாரும் ஆட்டைய போடுவது யார் என்று தேடி வந்தனர்.

சிசிடிவி காமிரா
இருந்தாலும் அதே பகுதியில் வசித்து வந்த இளங்கோ என்னும் ஆசிரியர், திருடனை கண்டுபிடிக்க தன் வீட்டை சுற்றிலும் மொத்தம் 6 இடங்களில் சிசிடிவி காமிராவை பொருத்தினார். இந்த சமயத்தில், இளங்கோவின் பக்கத்து வீட்டில் பெட்ரோல் திருடு போயுள்ளது. இதனால் உடனே தன் வீட்டு சிசிடிவி காமிராவை ஆன் செய்து பார்த்தார் இளங்கோ.

பெட்ரோல்
அப்போதுதான் திருடனை பார்த்து இளங்கோ ஷாக் ஆகிவிட்டார். திருடன் உள்ளே டார்ச் லைட்டுடன் நுழைகிறார். வந்தஉடனேயே பெட்ரோலை திருடிவிடுகிறார். அதற்கு பிறகு, வேறு ஏதேனும் திருட தேறுமா என்று சுற்றிலும் ஒரு லுக் விடுகிறார். ஒன்னும் கிடைக்கவில்லை. அப்போது ஒரு ஊஞ்சல் அங்கு இருப்பதை கண்டதும், அதில் ஏறி உட்கார்ந்து கொள்கிறார் திருடன்.

சிசிடிவி காட்சி
முகத்தில் ஒரு டென்ஷன் இல்லை.. திருட வந்திருக்கிறோமே என்ற உறுத்தலும் இல்லை.. ஜாலியாக அந்த ஊஞ்சலில் ஒரு ரவுண்டு சுற்றுகிறார். பிறகு சாவகாசமாக எழுந்து கிளம்பி செல்கிறார். இந்த காட்சியை கண்டதும், போலீசாரே அரண்டு விட்டனர்.

கோரிக்கை
இந்த திருடனை எப்படியாவது பிடியுங்கள் என்று அந்த பகுதி மக்களும் கோரிக்கையை வைத்துள்ளனர். திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிய இந்த சம்பவம்தான் விழுப்புரம் ஹாட் டாக்-காக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications