விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் முதல்வராக பிரார்த்தனை.. இருக்கன்குடி கோவிலில் கை விரலை துண்டித்துக் கொண்ட தி.மு.க தொண்டர்!

Google Oneindia Tamil News

விருதுநகர்: தங்களுக்கு பிடித்தமான கட்சி அல்லது கட்சியை சேர்நதவர் முதல்வராக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அந்த கட்சிகளின் தொண்டர்கள் கோவிலுக்கு முடி காணிக்கை செய்வது, பாதயாத்திரை மேற்கொள்ளுதல் போன்ற நேர்ச்சையை கடைபிடிப்பது வழக்கம்.

Recommended Video

    விருதுநகர்: ஸ்டாலின் முதல்வராக வேண்டி இப்படியா…? கைவிரலை துண்டித்துக் கொண்ட தீவிர விசுவாசி...!

    ஆனால் தி.மு.க வெற்றி பெற வேண்டியும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் எனக்கூறி தி.மு.க தொண்டர் ஒருவர் தனது விரலையே வெட்டியுள்ளார்.

    A DMK volunteer cut off his finger while praying for Stalin to become CM

    சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் குருவையா(66). கூலி வேலை செய்து வருகிறாராம். மிகத்தீவிரமான தி.மு.க விசுவாசியாம். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் தி.மு.க தோல்வி அடைந்ததால் விரக்தியில் இருந்துள்ளார் குருவையா.

    ரெய்டு ஆபீசர்ஸ் டிவி பார்த்துட்டு பிரியாணி சாப்பிட்டாங்க-வெறும் கையோடு போய்ட்டாங்க.. ஸ்டாலின் கலகலரெய்டு ஆபீசர்ஸ் டிவி பார்த்துட்டு பிரியாணி சாப்பிட்டாங்க-வெறும் கையோடு போய்ட்டாங்க.. ஸ்டாலின் கலகல

    இதனால் தி.மு.க வெற்றி பெற வேண்டியும், ஸ்டாலின் முதல்வராக வர வேண்டியும் அடிக்கடி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வேண்டி வந்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ளதால் தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

    அங்கு மாரியம்மனை தரிசனம் செய்த அவர், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் எனக்கூறி திடீரென தனது கை விரலை துண்டித்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    English summary
    A DMK volunteer cut off his finger while praying for Stalin to become chief minister
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X