திமுக கலாட்டா பண்ணாத ஒரே கடை 'சாக்கடை' மட்டுமே - நடிகை விந்தியா 'பொளேர்'
சாத்தூர்: தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவை இப்படித்தான் என்றில்லாமல் சரமாரியாக விமர்சித்து வருகிறார் நடிகை விந்தியா.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாைளயம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் விந்தியா பிரச்சாரம் செய்தார்.
இவரது பிரச்சாரங்களால் அதிமுகவிற்கு வாக்கு கிடைக்குமோ இல்லையோ, 2011ல் திமுகவுக்கு பிரச்சாரம் செய்த வடிவேலு-வின் காமெடிக்கு திரண்ட மக்கள் கூட்டத்தைப் போல், விந்தியாவின் பேச்சை மக்கள் ரசிக்கின்றனர்.

கைப்புள்ள சங்கத்தை கலைச்சிரு..
பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், "நெல்லையில் அன்பு காட்டினால் அல்வா வரும். வம்பு காட்டினால் அரிவாள் வரும். லேட்டஸ்டாக கிராமசபைக் கூட்டம் என்கிற பேரில் நாட்டாமை வேஷம் போட்டார் ஸ்டாலின். அதில் கலந்துகொண்ட மக்கள், 'கறவை மாட்டைக் காணோம், புருஷனைக் காணோம், குழந்தையைக் காணோம், தி.மு.க-வில் தருவதாகச் சொன்ன இரண்டு ஏக்கர் நிலத்தைக் காணோம்'னு கேட்ட உடனே, 'கைப்புள்ள சங்கத்தை கலச்சிரு' மோடில் எல்லாத்தையும் கலைச்சுட்டுக் கிளம்பிட்டாரு ஸ்டாலின்.

கலாட்டா பண்ணாத ஒரே கடை
எல்லா எலெக்ட்ரிக் கடைகளிலும் 'விடியலை நோக்கி'னு பேனர் வச்சிருக்காங்க. ஏம்ப்பா, எலட்க்ட்ரிக் கடையில போய் இந்த பேனரை வச்சிருக்கீங்க?-ன்னு கேட்டா, 'திமுக ஆட்சிக்கு வந்தா கரென்ட் இருக்காது. அதனால் எங்க கடையில், யூ.பி.எஸ்., பேட்டரி, டார்ச் லைட் வியாபாரம் சூடுபிடிக்கும். அதனால் இந்த போர்டை மாட்டியிருக்கோம்-ங்குறாங்க. எலெக்ட்ரிக் கடைக்காரர்கள் யாரும் திமுவை நம்பாதீங்க. உங்களுக்கு ஐந்து பைசா வருமானம் வந்தாலும், திமுககாரங்க வந்து சண்டை போட்டு கலாட்டா செஞ்சு கல்லாப் பெட்டிய தூக்கிட்டுப் போயிடுவாங்க. திமுக கலாட்டா பண்ணாத ஒரே கடை சாக்கடை மட்டும்தான்.

மக்கள் உஷாரு
ஸ்டாலின் தான் வர்றாரு-னு ஒரு பாட்டு இப்போ ஓடிக்கிட்டு இருக்கு. உண்மையில் மனசாட்சி உள்ளவங்க அந்த பாட்டை எப்படி எழுதியிருக்கணும்? 'ஸ்டாலின் தான் வராரு.. மக்கள் எல்லாம் உஷாரு.. திமுக வந்தா பேஜாரு.. பிரியாணி கடை உடைப்பாரு.. செல்பி எடுத்தா அடிப்பாரு.. இதுதான் அவர் வரலாறு-னு எழுதியிருக்கணும். இது எப்படி இருக்கு? பாட்டுன்னா தர்மப்படி, சட்டப்படி, நீதிப்படி இப்படித் தானே எழுதியிருக்கணும்?

திமுகவை நம்பாதீங்க
தேர்தல் வந்தாலே ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவார், ஆட்டோ ஓட்டுவார். விட்டால் பூசாரி வேஷம் போட்டு பேயும் ஓட்டுவார். கூகுள்ல நீங்க திமுக-னு போட்டுப் பாருங்க. நீங்க திமுக-ன்னு டைப் பண்ண உடனே, திமுக அட்டாக் பிரியாணி ஷாப், திமுக அட்டாக் போலீஸ் ஸ்டேஷன், திமுக அட்டாக் வுமன்-ன்னு தான் லிஸ்ட் வரும். தயவு செய்து யாரும் திமுகவை நம்பாதீங்க" என்று சரமாரியாக விட்டு விளாசினார்.
எதுவாக இருந்தாலும், மக்கள் தீர்ப்பே இறுதியானது. மே 2ம் தேதி தெரிந்துவிடும் அந்த முடிவு. காத்திருப்போம்
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications