சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சாத்தூர் சட்டசபை தொகுதியில் கடந்த 1952 முதல் 2021 வரை மொத்தம் 17 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் பாஜக ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. இந்நிலையில் தான் தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் களமிறங்கி உள்ளார். அவர் வெல்வாரா? அங்குள்ள சவால்கள் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரனுக்கு இந்த சட்டசபை தேர்தல் அக்னி பரீட்சயைாக உள்ளது. அண்ணாமலையை நீக்கிவிட்டு அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் இணக்கமாக பாஜக செல்ல வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Nainar Nagendran Sattur seat

இந்நிலையில் தான் இந்த சட்டசபை தேர்தலில் அதிக கூட்டணியில் பாஜகவுக்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. கடினமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கதறி வருகின்றனர்.

சாத்தூரில் நயினார் நாகேந்திரன்

மேலும், பாஜக மேலிடம் கூட அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் பிரதமர் மோடி உள்பட பிற வெளிமாநில பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழக பிரசாரத்தில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பு நயினார் நாகேந்திரன் தலைமையிலான தமிழக பாஜக தலைவர்களுக்கு உள்ளது.

இப்படியான சூழலில் தான் நயினார் நாகேந்திரனும் கூட திருநெல்வேலி தொகுதியை விட்டுவிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு மாறி உள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விருதுநகரில் வென்ற நயினார் நாகேந்திரன் இந்த முறை அதிமுகவிடம் அந்த தொகுதியை கொடுத்துவிட்டு சாத்தூரை கேட்டு பெற்றுள்ளார்.

ஒருமுறை வெல்லாத பாஜக

சாத்தூரில் நயினார் நாகேந்திரன் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் 27 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதனால் களம் மாறி நயினார் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், உண்மையில் இந்த தொகுதியில் நயினார் நாகேந்திரனின் வெற்றி எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. அவருக்கு பல சவால்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் சாத்தூர் சட்டசபை தொகுதியில் ஒருமுறை கூட பாஜக வெற்றி பெற்றது இல்லை.

1952 - எஸ். ராமசாமி நாயுடு - காங்கிரஸ்
1957 - கே. காமராஜ் (மறைந்த முன்னாள் முதலமைச்சர்) - காங்கிரஸ்
1962 - கே. காமராஜ் - காங்கிரஸ்
1967 - எஸ். ராமசாமி நாயுடு - சுதந்திராக் கட்சி
1971 - எஸ். அழகு தேவர் - பார்வர்டு பிளாக்
1977 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - அதிமுக
1980 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - அதிமுக
1984 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - அதிமுக
1989 - எஸ். எஸ். கருப்பசாமி - திமுக
1991 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - தாயக மறுமலர்ச்சி கழகம்
1996 - கே. எம். விஜயகுமார் - திமுக
2001 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - திமுக
2006 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - திமுக
2011 - ஆர். பி. உதயகுமார் - அதிமுக
2016 - எஸ். ஜி. சுப்பிரமணியன் -அதிமுக
2019 (இடைத்தேர்தல்) - எம். எஸ். ஆர். ராஜவர்மன் -அதிமுக
2021 - ஏஆர்ஆர் ரகுராமன் - மதிமுக (திமுக கூட்டணி) என விருதுநகர் தேர்தல் வரலாறு அமைகிறது.

பாசிட்டிவ் - நெகட்டிவ் என்ன?

இருப்பினும், ஒரேயொரு பாசிட்டிவான விஷயம் என்னவென்றால் இந்த தொகுதியில் அதிகமாக 6 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளதால் அது நயினார் நாகேந்திரனுக்கு ஆறுதலான விஷயமாகும். அதேவேளையில் இன்னொரு ஆபத்தும் உள்ளது. அது என்னவென்றால் அதிமுகவில் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவரது ஆதரவாளர்கள் கடற்கரை ராஜ் தான் திமுகவில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது நயினாருக்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது. அதோடு தற்போது திமுகவின் கூட்டணியின் மதிமுகவின் ரகுராம் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த முறை மதிமுக வேட்பாளரையே வெல்ல வைத்த திமுகவினர் இந்த முறை தங்களின் வேட்பாளர் கடற்கரை ராஜ்க்கு ஆதரவாக தீவிரமாக களமாடுவது நயினார் நாகேந்திரனுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

சசிகலாவால் இருக்கும் சவால்

இதுதவிர நயினார் நாகேந்திரனை அரசியலில் வளர்த்துவிட்ட சசிகலா அவருக்கு எதிராக திரும்பி உள்ளார். நயினார் நாகேந்திரனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சசிகலா தனது அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிஎம்டியின் இசக்கி ராஜா தேவரை களமிறக்கி உள்ளார். இவருக்கு தென்மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு உள்ளது. இதனால் அவர் நயினார் நாகேந்திரனுக்கு கிடைக்க வேண்டிய முக்குலத்தோர் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது. இதுவும் நயினார் நாகேந்திரனுக்கு நெகட்டிவாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+