விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூட்டணியில் இருப்பதால் திமுக சொல்வதை எல்லாம் கேட்க வேண்டுமா? பொங்கிய மாணிக்கம் தாகூர்! என்னாச்சு?

Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

Recommended Video

    கூட்டணியில் இருப்பதால் திமுக சொல்வதை எல்லாம் கேட்க வேண்டுமா? - மாணிக்கம் தாகூர்

    விருதுநகரில் காங்கிரஸ் கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான உறவு குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர், பேரறிவாளன் விடுதலை குறித்தும் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

    பெட்ரோல் கலால் வரியை உயர்த்தியது ரூ.26.77, குறைத்தது ரூ.14.50.. ஜோக் காட்றீங்களா? காங்கிரஸ் கண்டனம்பெட்ரோல் கலால் வரியை உயர்த்தியது ரூ.26.77, குறைத்தது ரூ.14.50.. ஜோக் காட்றீங்களா? காங்கிரஸ் கண்டனம்

     பிரசாத் கிஷோர்

    பிரசாத் கிஷோர்

    செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "உதய்பூரில் 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சியில் ஐந்து முக்கிய மாற்றங்கள் நடைபெற உள்ளது. பிரசாத் கிஷோர் சொல்வது மாற்றங்கள் இல்லை. பிரசாந்த் கிஷோர் காசு கொடுத்ததால் ஆலோசனை சொல்லும் ஆலோசகர் மட்டுமே. அவர் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது காசு கொடுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முடிவு எடுக்கும் மேலும், வாய்க்கு வந்ததைப் பேசுவது பிரசாத் கிஷோர் வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்" என்றார்.

     பெட்ரோல், டீசல் விலை

    பெட்ரோல், டீசல் விலை

    பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவிட்டால் அண்ணாமலை கோட்டையை முற்றுகையிடுவேன் என்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், "தமிழக பாஜகவில் வெறும் 18 நபர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களை வைத்துக் கொண்டு அண்ணாமலை முற்றுகை போராட்டம் என சீன் போடுகிறார். 2014ஆம் ஆண்டு இருந்த பெட்ரோல்,டீசல் விலை அளவுக்கு மத்திய அரசு விலையைக் குறைக்க வேண்டும்.

     அண்ணாமலை

    அண்ணாமலை

    அப்படி பெட்ரோல்- டீசல் விலையைக் கொண்டு வர விட்டால் தீ குளிப்பேன் என மோடியிடம் கூற அண்ணாமலை தயாரா? இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் தேர்தலை முன்னிட்டு தான் மத்திய அரசு இப்போது பெட்ரோல், டீசல் விலை குறைத்து உள்ளது.

     பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளனின் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்போதும் ஒரே நிலைப்பாடு தான். ஆனால் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுவதும் அவரை ஒரு தியாகி போல அவரின் விடுதலையைக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒரு நிலைப்பாடும் காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளன.

     எங்கள் வேலை இல்லை

    எங்கள் வேலை இல்லை

    அதேபோல் திமுக சொல்வதை ஏற்றுக் கொள்வது, எங்கள் வேலை இல்லை. காங்கிரஸ் சொல்வதை ஏற்றுக் கொள்வது திமுகவின் வேலை இல்லை. சீமான் பாஜகவின் பி அணி தான். பேரறிவாளனின் விடுதலை பாஜகவால் நடத்தப்படும் சதி. அதில் முக்கிய கதாபாத்திரம் சீமான் தான்" என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    Congress MP Manickam Tagore latest press meet about Perarivalan release: (திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசில் மாணிக்கம் தாகூர் விளக்கம்) Manickam Tagore slams DMK govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X