விருதுநகர் பாலியல் வழக்கு.. கைதான ஜுனைத் அகமது திமுகவிலிருந்து நீக்கம்.. ஹரிஹரன் நீக்கம் எப்போது?
விருதுநகர்: விருதுநகர் பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஜுனைத் அகமது திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
விருதுநகரில் 22 வயது பெண் ஒருவர் திமுக நிர்வாகி ஹரிஹரனுடன் காதல் வயப்பட்டு அவருடன் தனிமையில் இருந்த போது அதை ஹரிஹரன் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். அவரது நண்பர்கள் இருவருக்கும், பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

8 பேர் கைது
இதை வைத்து 7 பேரும் அந்த பெண்ணை மாதக்கணக்கில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கினர். இதுகுறித்து மாடசாமி என்பவரிடம் உதவுமாறு அந்த பெண் கேட்ட போது அந்த நயவஞ்சகரும் அதே போல் இந்த பெண்ணைிடம் தனது பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் புகாரின் பேரில் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் நிகழ்ந்துள்ள இந்த சம்பவததில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும் என தெரிவித்திருந்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
அது போல் பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

திமுகவிலிருந்து சஸ்பெண்ட்
இந்நிலையில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜுனைத் அகமது திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications