பாஜகவால் தொடக்கூட முடியாத மாநிலம் தமிழ்நாடு.. 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் - ஸ்டாலின்
விருதுநகர்: மாநிலங்களை முனிசிபாலிட்டி ஆக்கவும், மாநில கட்சிகளை ஒழிக்கவும் பாஜக முயற்சி செய்கிறது. ஆனால் பாஜகவால் தொடக்கூட முடியாத மாநிலமாக தமிழ்நாடு தான் இருந்து வருகிறது என ஸ்டாலின் பேசினார். மேலும் திமுகவை இன்னும் பல ஆண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. 7-வது முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் பேசினார்.
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இதில் தென் மண்டலத்தைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்து இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

விருதுநகர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது காமராஜர் தான். இந்த
காமராஜர் ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது மதிய உணவு திட்டம்.. காமராஜர் ஆட்சியில் எப்படி மதிய உணவு திட்டம் நினைவுக்கு வருகிறதோ, அதேபோல் திராவிட ஆட்சி என்றாலே காலை உணவு திட்டம்.
இளைஞரணி தொடங்கப்பட்டபோது விருதுநகர் மாவட்டத்தில் எனது காலடி படாத கிராமமே இல்லை. எப்போது இங்கு வந்தாலும் பாசத்தையும், நேசத்தையும் குறைவின்றி விருதுநகர் மக்கள் கொடுப்பார்கள். விருதுநகர் மண்ணில் மருது சகோதரர்கள் போன்று பணியாற்றிய கேகேஎஸ்எஸ்ஆர் மற்றும் தங்கம் தென்னரசுக்கு எனது பாராட்டுக்கள்.
விருதுநகரில் மாநாடு நடந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி என்பது உறுதி. 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 200 தொகுதிகளில் வெல்வதே நமது இலக்கு, அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா.. அதற்காக உழைக்க தயாராக இருக்கிறீர்களா நான் தயார்..
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டு இருக்கிறது. எந்த துறையை கொடுத்தாலும் அதில் தனி முத்திரை பதிக்கக் கூடியவர் தான் தங்கம் தென்னரசு..
இங்க கூடியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பார்த்து பார்த்த வளர்த்த இளைஞர் அணியில் இன்று உங்களை பார்க்கும் போது இந்த மகிழ்ச்சி டபுள் ஆகுது.. ட்ரிபுள் ஆகுது.
நம் திராவிட இனத்தின் மேன்மைக்காக, தமிழ் மொழியின் மேன்மைக்காக, தனித்துவமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உங்களை எல்லாம் கொள்கை பிடிப்போடும், கழகப் பற்றோடும் வளர்த்து இருக்கிறார் நம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.. உதயநிதி செயல்பாடுகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்.
சும்மா பெயரளவுக்கு இளைஞர்களை சேர்த்தால் போது என்று அவர் செயல்படவில்லை. பூத் லெவலில் தொடங்கி மாநில அளவு வரைக்கும் செலக்ட் செய்து, பயிற்சி அளித்து "நியூ ஏஜ் திராவிட ஸ்டாக்" ஆக உருவாக்கி தந்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
நீங்கள் ஒவ்வொருவரும் பெரியாருடைய கொள்கை வாரிசுகள், அண்ணாவுடைய கொள்கை வாரிசுகள். கருணாநிதியின் கொள்கை வாரிசுகள். நீங்கள் தான் அடுத்து நம் கழகத்தையும், தமிழ்நாட்டையும் காக்க போறிங்க..
பாஜகவினரால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். இந்தி திணிப்பு எனும் ஆபத்து இப்போதும் உள்ளது. மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலைமீது தொங்கிக்கொண்டு இருக்கிறது. திமுகவை இன்னும் பல ஆண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. 7-வது முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications