விருதுநகர் போக முடியலயே.. மளிகை கடையில் இனி இதுவும் கிடைக்காதா? போட்டு தாக்குது குண்டூர் வத்தல் விலை
விருதுநகர்: மளிகை பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டு வருகிறது.. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் ஏற்றம் இருப்பதுடன், ஓட்டல்களிலும் உணவு பொருட்களின் விலை உயர்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் வரை பருவமழை, காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் பல்வேறு விளைபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது.. ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்துவிட்டதால், மளிகைப் பொருட்களின் வரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காரணங்கள் பல சொல்லப்பட்டன.

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்தே காணப்பட்டன. குறிப்பாக, துவரம் பருப்பை தவிர, பாசிப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் 20 முதல் 40 ரூபாய் வரை உயர துவங்கின. இதற்கு பிறகு, கோடையில் இந்த விலை உயர்வானது, ஓரளவு குறைய ஆரம்பித்தது.
உணவு தானியம்: வழக்கமாக விருதுநகர் சந்தையில் விற்கப்படும் உணவு பொருட்களின் அடிப்படையில்தான், தமிழகத்தின் பிரதான இடங்களிலும் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
எனவே, வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் விருதுநகர் சந்தையில் வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில், ஒவ்வொரு முறையும் பாமாயில் விலை உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வாரமும் விருதுநகர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களின் விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.
அந்த லிஸ்ட் இதுதான்: விருதுநகர் மார்கெட்டில் உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.12500, குண்டூர் வத்தல் 100 கிலோவுக்கு ரூ. 1000 உயர்ந்து ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரத்து 500 என விற்கப்படுகிறது.
க.எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.50 குறைந்து ரூ.2 ஆயிரத்து 750, நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.6 ஆயிரத்து 270, பாமாலின் 15 கிலோவுக்கு ரூ.75 குறைந்து ரூ.1485, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.50 குறைந்து ரூ.2100, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோவிற்கு ரூ.30 குறைந்து ரூ. 4520, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.8200, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.5600
பாசிப்பருப்பு: துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.15300, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து ரூ.9300 முதல் ரூ.9500, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.9900, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.10400 முதல் ரூ.10600, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.8400, உளுந்து நாடு 100 கிலோ ரூ.9100, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.5200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மல்லி லயன் 40 கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.3400 முதல் ரூ.3550, மல்லி நாடு 40 கிலோ ரூ.2800 முதல் ரூ.3 ஆயிரத்து 300, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ.9 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம், வத்தல் நாடு 100 கிலோ ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம், கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4 ஆயிரத்து 700, எள்ளு புண்ணாக்கு 50 கிலோ ரூ.1800க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications