குண்டு மிளகாய் சரியுது.. உளுந்தம்பருப்பு உயருது.. விருதுநகர் மார்க்கெட்டில் ஏறும் மளிகை பொருள் விலை
விருதுநகர்: காய்கறிகளின் விலையை போலவே, மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.. இன்றைய மளிகை பொருட்களின் விலையை பாருங்க
கடந்த டிசம்பர் வரை பருவமழை, காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் பல்வேறு விளைபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது.. ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்துவிட்டதால், மளிகைப் பொருட்களின் வரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காரணம் சொல்லப்பட்டது.

விலை உயர்வு: அதன்படியே, கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்தது..பருப்பை தவிர, பாசிப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் 20 முதல் 40 ரூபாய் வரை உயர துவங்கின.
ஜனவரி மாதத்துக்கு பிறகு, இந்த விலை உயர்வு ஓரளவு குறைய ஆரம்பத்தது.. இந்நிலையில் விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில், கடந்த வாரம் விற்ற பொருட்களின் விலையில் இந்த வாரம் மிகப்பெரிய மாற்றம் தொன்படுகிறது..
பாமாயில்: 15 கிலோ பாமாயில் டின் கடந்த வாரம் 1565-க்கு விற்கப்பட்டது.. துவரம் பருப்பு நயம் புதுசு லயன் வகை 100 கிலோ 15,500க்கு விற்கப்பட்டது.. உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம் ரூ.12,700க்கும், உளுந்து (நாடு வகை) கலோ 100 கிலோ 10,200க்கும் விற்கப்பட்டன. முண்டு வத்தல் மூட்டை ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்கப்பட்டது. வத்தல் நாடு புதுசு வகை, ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை குறைந்து, ரூ,12,500 முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வாரம் விருதுநகர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களின் விலை நிலவரம் இதுதான்: உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ. 550 உயர்ந்து ரூ. 9100, துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 1700 குறைந்து ரூ. 13,800, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ. 8000 குறைந்து ரூ. 10,500 என விற்கப்படுகிறது.
கடலை எண்ணெய்: இங்கு கடலை எண்ணெய் 15 கிலோ ரூ. 2750, நல்லெண்ணெய் 15 கிலோ ரூ. 6435, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 25 குறைந்து ரூ. 1540, சீனி 50 கிலோவிற்கு ரூ. 40 உயர்ந்து ரூ. 2100, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோ ரூ. 4440, பொரிகடலை 55 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5200, கொண்டக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 250 உயர்ந்து ரூ. 7000 என விற்கப்படுகிறது.
உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 700 குறைந்து ரூ. 12,000, தொலிபருப்பு 100 கிலோ ரூ. 10,200, பாசிப்பருப்பு 100 கிலோ ரூ. 10,550, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ.10,000, மல்லி நாடு 40 கிலோ ரூ. 3500 முதல் ரூ. 3800, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600 என விற்பனை செய்யப்படுகிறது.
பட்டாணி: பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ. 5500, வத்தல் நாடு 100 கிலோவிற்கு ரூ. 1500 குறைந்து ரூ. 11,000 முதல் ரூ. 14,000, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 16,000 முதல் ரூ. 19,000, குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 13,000 முதல் ரூ. 16,000, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2100, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5300 என விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications