கூமாப்பட்டியில் கதையே வேறயாம்.. ரீல்சை நம்பி போனவங்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. வீடியோ போட்டவருக்கே சிக்கலா?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: கூமாபட்டிக்கு வாங்க என இணையத்தில் ரீல்ஸ் டிரெண்டிங் ஆன நிலையில், கூமாபட்டிக்கு வர வேண்டாம் எனவும், ரீல்ஸ்களில் காணப்படும் பசுமை வாய்ந்த பகுதிகள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை. இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது யாரும் இங்கு படையெடுக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிவிடுவதை பார்கக முடிகிறது. சமையல் வீடியோக்கள், டூரிஸ்ட் வீடியோக்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு வீடியோ டிரெண்ட் ஆகி பலரையும் இன்ஸ்டா பிரபலம் ஆக்கிவிடுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், எக்ஸ் என எந்த சமூக வலைத்தளம் போனாலும் "கூமாபட்டிக்கு வாங்க என்று அழைக்கும்" ஒரு வீடியோ வைரல் ஹிட் ஆனது.

dont-travel-to-koomapatty-tamil-nadu-pwd-urges-to-netizens-as-location-trends-on-social-media

சர்பத் மாதிரி இருக்கும் தண்ணீர்

"ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனி ஐலேண்டு" என ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டிலேயே ஏன்.. உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க..

உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? கவலைப்படாதீங்க.. கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமிங்க இது" எனவும் அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆன நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த கூமாபட்டி எங்கதான் இருக்கு எனத் தேட தொடங்கினர். இதனால், இணையதேடுதலில் கூமாபட்டி டிரெண்ட் ஆக தொடங்கியது.

யாரும் வந்து ஏமாற வேண்டாம்

இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாகவும் டிரெண்ட் ஆக்க தொடங்கினர். பலரும் கூமாபட்டிக்கு படையெடுக்க தொடங்கினர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள குக் கிராமம் தான் கூமாப்பட்டி. பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் இருப்பதால் இந்த கிராமம் கண்ணுக்கு விருந்தளிக்க கூடிய இயற்கை காட்சிகளை கொண்டுள்ளது.

ஆனால், அந்த வீடியோவில் காட்டப்படுவது போல தற்போது அந்த கிராமம் இல்லை எனவும், ஆறுகள் வறண்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது. இணையத்தில் பரவுவது பழைய வீடியோவாக இருக்கலாம் எனவும் சொல்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், அந்த அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

ரீல்ஸ் போட்ட நபருக்கு சிக்கல்?

ரீல்ஸ்களில் காணப்படும் பசுமை வாய்ந்த பகுதிகள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை. கொரோனா காலத்திலேயே இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது யாரும் இங்கு படையெடுக்க வேண்டாம் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கூமாபட்டிக்கு வாங்க என ரீல்ஸ் போட்ட நபர் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்தாரா என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஒரே ஒரு ரீல்ஸ், கூமாபட்டியை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைய வைத்துவிட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+