மிமிக்ரி ஆடியோ.. புதுசா வந்தவன் செய்த வேலை.. ஸ்டாலின்கிட்ட கேட்பீங்களா.. நிருபரிடம் எகிறிய எச் ராஜா
விருதுநகர்: அமைச்சர் பிடிஆர் பழனிவேலின் கார் மீது செருப்பு வீச்சு சம்பவத்தில் "அண்ணாமலை ஆடியோ" குறித்து கேள்வி எழுப்பிய நிருபரிடம் எச் ராஜா கோபமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மறைந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரையில் அஞ்சலி செலுத்த பாஜகவினர் வந்ததற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆட்சேபம் தெரிவித்தார். அரசு சார்பில் மரியாதை செலுத்தும் இடத்தில் சம்பந்தமே இல்லாமல் கட்சியினருக்கு என்ன வேலை என கேட்டிருந்தார். இதனால் பாஜகவினருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இந்த விவகாரத்தால் கோபமடைந்த பாஜக தொண்டர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசினர். தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் செருப்பு வீசப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர்
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த சரவணன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அமைச்சரை போய் நள்ளிரவில் சந்தித்து மன்னிப்பும் கேட்டார். இந்த செருப்பு வீச்சு சம்பவம் திட்டமிட்ட ஒன்று என்றும் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை மாவட்ட நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தியிருந்தார் என ஒரு ஆடியோ வெளியானது.

ஆடியோ இல்லை
ஆனால் இது அண்ணாமலை பேசிய ஆடியோ இல்லை என மதுரை மாவட்ட பாஜகவினர் மறுத்தனர். அப்படி யாருமே பேசவில்லை. அது யார் குரல் என்பதை இனிதான் ஆராய வேண்டும். தலைவர் அண்ணாமலைக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்திருக்கிறார்கள் என தெரிவித்தனர்.

மதுரை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
இது தொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைமில் பாஜக தரப்பினர் புகாரும் கூறியுள்ளார்கள். இந்த நிலையில் விருதுநகரில் பாஜக நிர்வாகி எச் ராஜாவிடம் அண்ணாமலை ஆடியோ குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மதுரை மாவட்ட தலைவர் அந்த ஆடியோ போலியானது என்றும் அதில் உள்ள அவர் குரலே இல்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

ஏன் கேட்கிறீங்க
அது குறித்து மதுரை கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் கூறியாகிவிட்டது. அத்தோட முடிஞ்சி போச்சு. பிறகும் ஏன் அண்ணாமலை ஆடியோ குறித்து கேட்குறீங்க, மீறியும் அதையே கேட்டா தப்பா போகும். என் கட்சியை பற்றி பேசாதீர்கள், மிமக்ரி பண்ணி வெளியிட்டிருக்காங்க. இதை போய் ஸ்டாலின் கிட்ட "உங்கள் கட்சிக்கு புதுசா வந்தவன் இப்படி மிமிக்ரி ஆடியோ வெளியிட்டிருக்கானே" கேட்க திராணி இருக்கா என எச் ராஜா கொந்தளித்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications