மனைவி, கொத்தனாரை மறைந்திருந்து நோட்டமிட்ட விருதுநகர் கணவன், அங்கே கண்ட காட்சி! அலறிய அருப்புக்கோட்டை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, மனைவியையும் அவருடன் நெருங்கிப் பழகி வந்த ஆனந்தராஜையும், கணவர் சரவணக்குமார் அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொன்றே விட்டார்.. வீட்டை விட்டு வெளியே செல்வதாக சொல்லிவிட்டு, இதற்காகவே பக்கத்தியே காத்து கொண்டிருந்தாராம் சரவணக்குமார்.. அதற்கு பிறகுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், இந்த கொடூரத்தால் தாய், தந்தையை இழந்து 3 குழந்தைகளும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. என்ன நடந்தது?

பாளையம்பட்டி கொத்தனார் காலனியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (26). இவரது மனைவி பொன்னழகு (21). இந்தத் தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி 2 பேருமே கட்டிட வேலைக்கு செல்பவர்கள்.

Aruppukottai

அருப்புக்கோட்டை கொத்தனார்

அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் ஆனந்தராஜுக்கும் பொன்னழகுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமாக மாறியுள்ளது. இதுபற்றி சரவணக்குமாருக்கு தெரியவந்ததும் கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மனைவியின் தவறான பழக்கம்

மனைவிக்கும் ஆனந்தராஜுக்கும் இடையேயிருந்த பழக்கம் குறித்து தெரிந்த சரவணக்குமார், இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் பொன்னழகு, தன் கணவர் சொல்வதை காதிலேயே வாங்கவில்லை.. அதேபோல், கொத்தனார் ஆனந்தராஜிடமும் தனது மனைவியுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளுமாறு சரவணக்குமார் கேட்டுள்ளார். கொத்தனாரும் அவரது பேச்சை கேட்கவில்லை.

தன்னுடைய பேச்சை இருவருமே கேட்கவில்லை என்பதால், கொத்தனார் ஆனந்தராஜுடன், பொன்னழகு தொடர்ந்து பழகி வருவதாக சரவணக்குமார் சந்தேகித்துள்ளார்.. அதனால் இருவரையும் கண்காணித்து, கையும் களவுமாக பிடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்..

Aruppukottai

கண்ணால் கணவன் கண்ட காட்சி

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சரவணக்குமார் வீட்டை விட்டு வெளியே செல்வதாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.. ஆனால் அவர் எங்கும் செல்லவில்லை. வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்து என்ன நடக்கிறது என்று கண்காணித்து கொண்டிருந்தார்,

அப்போது சரவணக்குமார் வீட்டில் இல்லை என்று தெரிந்ததுமே, ஆனந்தராஜ், பொன்னழகின் வீட்டுக்குள் நுழைந்தார்.. அப்போது இருவரும் வீட்டில் ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது. கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குள் சென்ற சரவணக்குமார், இருவரையும் ஒன்றாக பார்த்து விட்டார்.. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன சரவணக்குமார், வீட்டிலிருந்த அரிவாளால் 2 பேரையுமே சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் கற்களாலும் அவர்களை தாக்கியிருக்கிறார்.

சத்தம் கேட்டு எழுந்த 3 குழந்தைகள்

இதனால் ஆனந்தராஜும், பொன்னழகும் வலியால் அலறி துடித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளும் எழுந்து பயத்தில் அலறினார்கள்..

தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த கொலையாளி சரவணக்குமாரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 குழந்தைகளின் எதிர்காலம்?

இந்த சம்பவத்தால் 2 குடும்பங்களைச் சேர்ந்த 5 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.,, பொன்னழகு உயிரிழந்ததால் அவரது 3 குழந்தைகளும் தாயை இழந்துள்ளனர். ஆனந்தராஜ் உயிரிழந்ததால் அவரது 2 குழந்தைகளும் தந்தையை இழந்துள்ளனர்.

ஒரே சம்பவத்தில் 2 குடும்பங்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.. தாய், தந்தையை இழந்த இந்த 5 குழந்தைகளின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+