ஏங்ங்க.. ஊரையே ஏமாத்திய கூமாபட்டியன்! ஒன்னுமே கிடையாது! இது உலக மகா ஸ்கேமுடா சாமி! உண்மை இது தான்!
சென்னை: எங்கு பார்த்தாலும் கூமாபட்டி தான்.. 'ஏங்க கூமாபட்டிக்கு வாங்க' என இளைஞர் ஒருவர் வீடியோ போட பலரும் அந்த ஊர் எங்கு இருக்கிறது என தேடத் தொடங்கினர். உண்மையில் கூமாபட்டியில் நீர் நிலைகள் எதுவுமே கிடையாது. இருப்பது வறண்டு தான் உள்ளது. அந்த ஊரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிளவக்கால் அணையை வைத்து தான் அந்த இளைஞர் வீடியோ போட்டு இருக்கிறார். இதை அடுத்து பலரும் அங்கு படை எடுத்த நிலையில், ஒன்றுமே இல்லாததால் வெறுப்பில் சமூக வலைதளங்களில் அந்த இளைஞருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திடீர் திடீரென சமூக வலை தளங்களில் ஏதாவது ஒரு விவகாரம் ட்ரெண்டாவது வழக்கம். வணக்கம் டா மாப்ள தேடி தொடங்கி PRAY FOR நேசமணி வரை எக்கச்சக்க விஷயங்கள் எதற்கு ட்ரெண்ட் ஆகிறது என்றே தெரியாமல் ட்ரெண்டாகும். அப்படி ஒரு விஷயம் தான் கூமாப்பட்டி.
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என இளைஞர் ஒருவர் போட்ட ரீல்ஸ் அதிக அளவில் ட்ரெண்ட் ஆனது. ஏங்க எங்க ஊரு கூமாபட்டி சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. சர்பத் மாதிரி இருக்கும்.. 7அப் மாதிரி இருக்கும்! தனி ஐலாண்டு கூமாபட்டி..

கல்யாணம் ஆகலையா கூமாபட்டிக்கு வாங்க.. கவலையா இருக்கா கூமாபட்டிக்கு வாங்க.. லவ் ஃபெயிலியரா கூமாபட்டிக்கு வாங்க..! என விதவிதமாக வசனத்தோடு அவர் போட்ட வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டது. இதை அடுத்து கூகுள் மேப் தொடங்கி பல சமூக வலைதளங்களில் கூமாபட்டி ட்ரெண்டானது. பலரும் ஆர்வத்தோடு அந்த ஊரை பற்றி விசாரிக்க தொடங்கினர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கும் ஒரு சின்ன கிராமம் தான் கூமாப்பட்டி.
கோவிலாறு அணை, பிளவக்கல் பெரியாறு அணை ஆகிய அணைகளுக்கு முன்னதாக இந்த இருக்கிறது உண்மையில் இந்த ஊருக்கும் பிளவக்கல் அணைக்கும் சம்பந்தமே இல்லை. கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் இடைவெளியில் தான் பிளவக்கல் அணையும் கூமாபட்டியும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிளவக்கல் அணைக்குச் சென்ற அந்த இளைஞர் அதனை வீடியோ எடுத்து கூமாபட்டிக்கு வாங்க என வீடியோ போட்டுள்ளார்.
தற்போது அதுதான் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இளைஞர் ரீல்ஸ் வீடியோவை நம்பி பலரும் அந்த பகுதிக்கு படையெடுத்து சென்றனர். வீடியோவில் போட்டது போல கூமாபட்டியை சுற்றி எந்த நீர் நிலையும் இல்லை. இருந்த ஒரு குளமும் வாய்க்காலும் வறண்டு போயிருக்கிறது. பிளவக்கல் பெரியார் அணையை முறையாக பராமரிக்காததன் காரணமாகவே அந்த ஊருக்கு தண்ணீர் வரத்து இல்லை என சொல்லப்படுகிறது.
இதை அடுத்து பிளவக்கல் அணைக்காவது செல்வோம் என பலரும் அங்கு சென்று நிலையில் அங்கு குளிக்க அனுமதி இல்லை என பொதுப்பணித்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அந்த இளைஞரின் வீடியோவை நம்பி சென்ற பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பியுள்ளார். இதனையடுத்து ஏமாந்த பலரும், தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர். 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மோசடி இந்த கூமாபட்டி மோசடி என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications