விருதுநகர் லோக்சபா தொகுதி.. கைப்பற்றப்போவது யார்? தேமுதிக வசமாகுமா? களநிலவரம் சொல்வதென்ன?
விருதுநகர்: கந்தக பூமியான விருதுநகர் லோக்சபா தொகுதி கடந்த 2009ஆம் ஆண்டு 39வது லோக்சபா தொகுதியாக உருவாக்கப்பட்டது. 3 லோக்சபா தேர்தல்களை கண்ட இந்த தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர். தேமுதிக செல்வாக்கு உள்ள தொகுதியாக கருதுவதால் இரண்டு முறை போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த முறை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் களம் காணப்போகிறார். கடந்த முறை நடைபெற்ற லோக்சபா தேர்தல்களில் தேமுதிக பெற்ற வாக்குகளை பார்க்கலாம்.
விருதுநகர் வணிகர்கள் அதிகம் நிறைந்த பகுதி, விருதுநகர், சிவகாசி,சாத்தூர் என பட்டாசு தொழிற்சாலைகள், பிரிண்டிங் நிறுவனங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறைந்த லோக்சபா தொகுதி. அருப்புக்கோட்டை மில்கள், நெசவாளர்கள் நிறைந்த தொகுதி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஓரளவு வளமான தொகுதிகள். 15 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர்.

தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட உடன் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து களம் கண்டது. 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் குறிப்பிடத் தக்க அளவு வாக்குகளைப் பெற்று, பதிவான மொத்த வாக்குகளில் 10.5 சதவீத வாக்குகளைப் பெற்றது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுக இணைந்து போட்டியிட்டது. தேமுதிக தனித்து களம் கண்டது. விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் மதிமுக இணைந்து போட்டியிட்டது. விருதுநகருக்கு அறிமுகமே இல்லாத முற்றிலும் புதியவரான மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் கண்டார்.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மாணிக்கம் தாகூர் 307,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே நேரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 291,423 வாக்குகள் பெற்றார். தனித்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கே. பாண்டியராஜன் 125,229 வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பலமுனை போட்டி நிலவியது. அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி பாஜக உடன் இணைந்து போட்டியிட்டது. தேமுதிக பாஜக உடன் இணைந்து களம் கண்டது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய டி.ராதாகிருஷ்ணன் 406,694 வாக்குகள் பெற்றார்.
மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் களம் கண்டார் அவர் பெற்ற வாக்குகள் 38,482 மட்டுமே. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மாணிக்கம் தாகூர் 307,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே நேரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 261,143 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக வேட்பாளராக களமிறங்கிய எஸ்.ரத்தினவேலு 241,505 வாக்குகள் பெற்றார். சிபிஐ வேட்பாளர் கே. சாமுவேல் ராஜ் 20,157 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக,பாஜக, தேமுதிக, பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. இதில் விருதுநகர் தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்கியது அதிமுக. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கிய பி. மாணிக்கம் தாகூர் 470,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே நேரத்தில் தேமுதிக வேட்பாளர் ஆர்.அழகர்சாமி 316,329 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில் அமமுக வேட்பாளர் எஸ்.பரமசிவ ஐயப்பன் 107,615 பெற்றார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.முனியசாமி 57,129 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.அருள்மொழித்தேவன் 53,040 வாக்குகளை பெற்றார்.
இம்முறை அதிமுக தனி கூட்டணி அமைத்துள்ளது. திமுக கடந்த முறை இணைந்து போட்டியிட்ட கூட்டணி கட்சியினருடன் இணைந்து களம் காண்கிறது. பாஜக பாமக, தமாக, அமமுக, ஓபிஎஸ், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சியும் இம்முறை தனித்து போட்டியிடுகிறது.
விருதுநகர் லோக்சபா தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள அமமுக இந்த தொகுதியை கேட்டு பெற உள்ளது. எனவே தேமுதிகவிற்கு இம்முறை பலமான போட்டி உள்ளது. விஜய பிரபாகரன் போட்டியிடும் பட்சத்தில் கடும் போட்டிக்கு இடையேதான் வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியும். முதல் முறையாக தேர்தலில் களமிறங்கப்போகும் விஜய பிரபாகரன் சாதிப்பாரா பார்க்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications