உள்ளே.. வெளியே.. சூடுபிடிக்கும் அரசியல் சதுரங்கம்! மாறி மாறி நிர்வாகிகளை தூக்கும் திமுக - அதிமுக!
விருதுநகர்: தேர்தல் நெருங்க நெருங்க கட்சி தாவும் நிர்வாகிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கிய தலைவர்களை தட்டி தூக்கி வருகிறது திமுக. திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக அவர்கள் கட்சி நிர்வாகிகளை தூக்கி வருகிறது. இதேபோல மாவட்ட அளவில் நிர்வாகிகள் கட்சித் தாவி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகரிலும் கட்சித் தாவும் படலம் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் சில அதிமுகவினர் திமுகவுக்கு தாவிய நிலையில், தற்போது திமுகவினர் அதிமுகவுக்கு தாவி அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டம், ஆர்ப்பாட்டம், மக்கள் சந்திப்பு என அரசியல் கட்சிகள் கள அரசியலுக்கு திரும்பி இருக்கின்றன.
இது ஒருபுறம் இருந்தாலும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பிற கட்சிகளில் செல்வாக்கை குறைக்க அங்கிருக்கும் நிர்வாகிகளை தட்டித் தூக்கும் படலங்களும் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக பிற கட்சிகளில் இருந்து முக்கிய புள்ளிகளை வளைத்து வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்
திமுகவின் இந்த முயற்சிக்கு பெரும் வெற்றியும் கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழக அளவில் பிரபலமான அதிமுக புள்ளிகள் பலர் அடுத்தடுத்து திமுகவுக்கு தாவி வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் அதிமுகவில் பிரபலமாக இருந்த அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து திமுகவுக்கு தாவி வருவது அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த காலங்களில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்த பின், திமுகவுக்கு தாவும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திமுக நடவடிக்கை
செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், தோப்பு வெங்கடாசலம் என அந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. இதனையடுத்து தேர்தலுக்கு முன்னர் எதிர்க் கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை அதிமுக திமுக தீவிரமாக செய்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேர்க்கும் பணியை துரிதப்படுத்தி இருக்கிறார். இதற்கு பலனும் கிடைத்திருக்கிறது.
நிர்வாகிகள் கட்சி தாவல்
சொல்லப்போனால் தினம்தோறும் ஏராளமான அதிமுகவினரும் மாற்றுக் கட்சியினரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். அதே நேரத்தில் திமுகவில் புதியவர்களால் அதிருப்தியில் இருக்கும் பழைய சீனியர்களை அதிமுகவில் இணைக்கும் பணியும், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தான் மாவட்ட அளவிலான நிர்வாகி ஒருவரை தட்டித் தூக்கி இருக்கிறது அதிமுக. திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளரான அருண்குமார் உள்ளிட்ட 200 பேர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்து இருக்கின்றனர்.
விருதுநகர் அதிமுக
கடந்த சில தினங்களாகவே விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி தாவல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் ஐடி விங் நிர்வாகி ஒருவரை தூக்கி இருக்கிறது அதிமுக. மேலும் மேலும் சில முக்கிய நிர்வாகிகள் திமுக தரப்பிலிருந்து அதிமுகவுக்கு தாவலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக நிர்வாகிகளை திமுகவுக்கு இழுக்கும் நடவடிக்கைகளையும் திமுகவினர் தீவிரமாக்கி வருகின்றனர்.
-
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்











Click it and Unblock the Notifications