"கம்பெனி" தர்றீங்களா.. அத்துமீறிய நபரை நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்த பெண்கள்.. பரபர வீடியோ!
பாலியல் தொல்லை தந்த நபரை பெண்கள் புரட்டி எடுத்துள்ளனர்
Recommended Video
விருதுநகர்: வேலை வாங்கி தரணும்னா எனக்கு "கம்பெனி" தரணும் என்று படுக்கைக்கு அழைத்த நபரை பெண்கள் நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த நபர். கலெக்டர் ஆபீசில்தான் வேலை பார்ப்பதாக சொல்லி கொண்டு, ஊரெல்லாம் கெத்து காட்டி வந்துள்ளார்.

அத்துடன் இல்லாமல், யாருக்கு என்ன வேலை ஆகணுமோ என்கிட்ட சொல்லுங்க என்று உதார் விட்டு திரிந்து வந்துள்ளார். குறிப்பாக இளைஞர், பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஒரு குறிப்பிட்ட தொகையையும் கறந்து வந்திருக்கிறார்.
சம்பந்தப்பட்ட பெண்களை இங்க வா, அங்க வா என்று அலைக்கழித்துவிட்டு, வேலை வேணும்னா எனக்கு "கம்பெனி" தரணும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார். ஒருசில பெண்களை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டியும் வந்துள்ளதாக தெரிகிறது.
இதில் ஒரு பெண் வசமாக சிக்கி விடவும், வேறு வழி இல்லாமல், அவரது தோழிக்கு விஷயத்தை சொல்லி அழுதுள்ளார். அப்போதுதான் தெரிகிறது, அந்த தோழிக்கும் இவர் பாலியல் தொல்லை தந்துள்ளார் என்பது. அதனால் 2 பெண்களும் சேர்ந்து, உதார்பேர்வழிக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தனர். அதன்படி, சம்மதம் சொல்வதுபோல பேசி, வீட்டுக்கும் அந்த நபரை வரவழைத்துவிட்டனர்.
ஆசை ஆசையாக ஓடிவந்த மைனரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர் பெண்கள். நடுரோட்டிலேயே வைத்து கும்மி கும்மி எடுப்பதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள், பொதுமக்களும் விஷயத்தை கேள்விப்பட்டு ஆத்திரத்தில் வந்து அவர்களும் நபரை புரட்டி எடுத்தனர்.
இறுதியில் போலீசில் அந்த நபரையும் எல்லாரும் சேர்ந்து பிடித்து தந்தனர். கலெக்டர் ஆபீசில் வேலை பார்ப்பதாக சொல்லும் இந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications