அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச தொடங்கியதுமே இப்படியா நடக்கனும்! மின் தடையால் இருளில் மூழ்கிய அரங்கு!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியில் இன்று மின்வெட்டு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் ஜெகதீஸ்வரி பேசுவதற்கு மைக்கை கையில் எடுத்த அடுத்த நொடி திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக பேச தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. மின் தட்டுப்பாட்டை போக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்க தவெக அரசு டெண்டர் போட்டுள்ளது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு பிரச்சினை ஓயந்தபாடில்லை.

Minister Jagadeeswari began to speak the hall plunged into darkness due to a power cut

பேசத் தொடங்கியதும் மின்வெட்டு

மாநிலத்தின்பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்தபடியே உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியிலும் இன்று மின்வெட்டு ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது அவர் பேசத் தொடங்கினர். ஜெகதீஸ்வரி பேசுவதற்கு மைக்கை கையில் எடுத்த அடுத்த நொடி திடீர் மின்தடை ஏற்பட்டது.

இதனால் அவர் உடனடியாக பேச தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்பிறகு ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச தொடங்கினார். விருதுநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை திடீர் திடீரென ஏற்படுவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குக் கூட முன்னேற்பாடாக முறையாக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இது நிர்வாக குளறுபடியையே காட்டுவதாக சமூக ஆர்வர்லர்கள் குற்றம் சாட்டினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மின் தடை

நடப்பு மாத துவக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்ய வந்தார். எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிட்டு கொண்டு இருந்த போதே கோவிலில் மின் தடை ஏற்பட்டது. இதற்கு மறுநாளே, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார்.

சாமி தரிசனம் முடித்த பிறகு மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக நின்று பிரஸ்மீட் கொடுத்தார். அப்போது மீண்டும் மின் தடை ஏற்பட்டது. துணை ஜனாதிபதி வருகையின் போதே மின் தடை ஏற்பட்ட சம்பவம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது குறித்து விளக்கம் அளித்த நிர்மல் குமார், ஜெனரேட்டர் ஸிவிட்ச் மாற்றும் போதும் சில வினாடிகள் பவர் கட் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+