அமைச்சர் கீர்த்தனா சொன்ன குட் நியூஸ்.. சிவகாசி பட்டாசு விற்பனைக்கு ரூ.10 ஆயிரம் கோடி இலக்கு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: "இந்த ஆண்டு பட்டாசு விற்பனை ரூ.8,000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.7,000 கோடிக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றுள்ளது. இருந்தாலும் அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும்" என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் சென்று மாணவ, மாணவிகளுடன் தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடினார்.

Sivakasi Firecrackers Tamil Nadu News Firecracker Industry

அங்குள்ள ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி பட்டாசுகளை வழங்கிய அமைச்சர், அவர்களுடன் சேர்ந்து பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு அசைவ உணவுகள் வழங்கப்பட்டன. அவர்களுடன் உட்கார்ந்து அமைச்சரும் உணவு சாப்பிட்டார்.. பிறகு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசு

இதேபோல் சிவகாசியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டும் வகையில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, நகரின் தூய்மையைப் பராமரிப்பதற்காக இரவு பகலாக உழைக்கும் 400-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நேரில் தீபாவளிப் பரிசுத் தொகுப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் சேவையைப் பாராட்டவும் வழங்கப்பட்ட இந்தப் பரிசுத் தொகுப்பில் தீபாவளிப் பலகாரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அரசின் இந்த நடவடிக்கை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

ரூ.10,000 கோடி இலக்கு

இதனிடையே, இந்த ஆண்டு பட்டாசு விற்பனை ரூ.8,000 கோடியைத் தாண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.7,000 கோடி அளவுக்கே விற்பனை நடைபெற்றுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்..

மேலும், சரவெடி பட்டாசுக்கு சுப்ரீம் கோர்ட அனுமதி அளித்துள்ளதால் அடுத்த வருடமே விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது, 2027-ம் ஆண்டில் ரூ.10,000 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனா இன்று தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிவகாசியின் தளராத உழைப்பும் தன்னம்பிக்கையும், தமிழகத்தின் பெருமை. ஒவ்வொரு பட்டாசுக்குப் பின்னாலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் கடின உழைப்பும், திறமையும், எதிர்காலக் கனவுகளும் அடங்கியுள்ளன.

அடுத்த ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி விற்பனை

முதல்வர் விஜயின் தலைமையில் செயல்படும் நமது அரசு, இந்த பாரம்பரியமிக்க தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சிவகாசியை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லவும் உறுதுணையாக இருக்கும்.

அடுத்த ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி விற்பனை என்ற மாபெரும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இத்தொழிலுக்கு, அந்த மைல்கல்லை எட்ட தமிழக அரசு அனைத்து வகையிலும் முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறோம்" என்று கீர்த்தனா கூறியுள்ளார்.

சிவகாசியின் பட்டாசுத் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவும், இந்தத் தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதனால், 2027-ம் ஆண்டில் ரூ.10,000 கோடி விற்பனை இலக்கை சிவகாசி பட்டாசுத் தொழில் எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+