ரஜினி- ராஜேந்திர பாலாஜி.. அன்று நக்கலடித்த வேற வாய் இன்று பாராட்டுகிறதே!.. அடடா ஆச்சரியக்குறி!
விருதுநகர்: ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள்.
ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என்று கூறும் இதே சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். பாஜகவின் அலையை வைத்து தான் அவரே முதல்வர் ஆனார்.

முடியாமல்
கமல்ஹாசன் யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு அரசியல் என்னும் கடலில் இறங்கிவிட்டார். தற்போது நீந்தி கரை சேரமுடியாமல் முழிக்கிறார்.

பிடிக்கும்
கமல் தேர்தலில் நின்று ஒரு தொகுதியில் ஜெயித்து காட்டட்டும் நான் சவாலாகவே விடுகிறேன். ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கூறிய கருத்துகளும் பிடிக்கும்.

கிண்டல்
குடும்பத்தை கவனியுங்கள் என்று ரஜினி கூறியது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இதே ராஜேந்திர பாலாஜி அன்று ரஜினி வயசானவர், இனி தேர்தல் பிரசாரத்துக்கெல்லாம் செல்ல முடியாது என கிண்டல் அடித்தார்.

குழப்பம்
அரசியலுக்கு வர பல்வேறு சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அது ரஜினிக்கு தெரியாது என்றும் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்த நிலையில் தற்போது ரஜினியின் கருத்தை பாராட்டுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications