அதிமுகவினர் சட்டையை தொட்டால்.. கிழிக்கணும்.. கதவை தட்டினால்.. உடைக்கணும்.. ராஜேந்திர பாலாஜி அதிரடி!
திமுகவினர் சட்டையை கிழிக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: "அதிமுகவின் சட்டையை தொட்டால், நாம் திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும். நம் வீட்டுக் கதவை தட்டினால், திமுகவினர் வீட்டுக் கதவை நாமே உடைத்து நொறுக்க வேண்டும். இது சம்பந்தமாக என்ன பிரச்சனை வந்தாலும் சரி, நானே பார்த்துக்கறேன்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பொதுவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக பேசக்கூடியவர்... மனசில எதையுமே வெச்சுக்க மாட்டார். பல சமயங்களில் இவரது பேச்சுக்கள் சர்ச்சையானாலும், அவைகள் பெரும்பாலும் வெள்ளந்தியாகவே இருக்கும்.
ஆனால் சில சமயங்களில் அமைச்சர் பேசுவதை எப்படி எடுத்து கொள்வது என்று நமக்கு தெரியாமல் பல நேரம் குழப்பமாகிவிடும். "நீங்கெல்லாம் இப்பதான் ரவுடி.. நாங்க யார் தெரியுமா? பிறவிலேயே ரவுடி.. முதல்வர் கை அசைத்தால் போதும், திமுகவையே அழிச்சிடுவோம்" என்றார்.

பரபரப்பு பேச்சு
ஒரு அமைச்சரா இப்படி பேசுவது என்று மக்கள் அதிர்ச்சியும் வெளிப்படுத்தினர். இந்த நிலையில், திரும்பவும் இப்படி ஒரு பேச்சினை வெளிப்படுத்தி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுகவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது வழக்கம்போல பரபரப்பை கிளப்பி வருகிறது.

சண்டை வரும்
அப்போது அவர் சொன்னதாவது: "அதிமுகவை விட்டு பிரிந்து போனவர்கள் இப்போது இணைந்துள்ளனர். சகோதர சண்டை எங்களுக்குள் நடக்கும். மொத்தம் எங்க கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் உட்கட்சி சண்டை இருக்கத்தான் செய்யும். ஆனா, அதிமுக மட்டும்தான் ஆள வேண்டும்.

சீட் தர முடியாது
இப்போது உள்ளாட்சி தேர்தல் சம்பந்தப்பட்ட வேலை நடந்து வருகிறது. வசதி வாய்ப்பில்லாதவங்க, வயசானவங்களுக்கு எல்லாம் சீட் தர முடியாது. இது கம்ப்யூட்டர் காலம்.. இளைஞர்களை தேர்வு செய்து சீட்டு கொடுங்க.. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் அத்தனை வேட்பாளர்களும் வெற்றி பெற எல்லா முயற்சி, பணிகளையும் நான் செய்வேன்.

சட்டை கிழிய வேண்டும்
தேர்தல் நேரத்தில் அதிமுகவின் சட்டையை தொட்டால், நாம் திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும். நம் வீட்டுக் கதவை அவங்க தட்டினால், திமுகவினர் வீட்டுக் கதவை நாமே உடைத்து நொறுக்க வேண்டும். இது சம்பந்தமாக என்ன பிரச்சனை வந்தாலும் சரி, முழுக்க முழுக்க உங்களுக்கு நான் பக்கபலமா இருப்பேன். என்னுடைய 16 வயசுல இருந்து கோர்ட், கேஸ்களை பார்த்து வருகிறேன்.. அதை பத்தி எனக்கு கவலை இல்லை.. எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மாதான் என்னை வழி நடத்துகிறது" என்றார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!











Click it and Unblock the Notifications