இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை
விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு தர வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லி என்ற இடத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனைக் கூறினார்.
ராஜேந்திரபாலாஜியின் இந்தக் கருத்து அதிமுகவில் உள்ள இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் வராத நிலையில், அதிமுக சார்பில் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிப்புத்தூர் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார்.

தலைமைக்கு கோரிக்கை
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் அதிகளவில் இளைஞர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனவும் கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.

கைதட்டல்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த இளைஞர்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்தக் கருத்தை பலத்த கைதட்டலுடன் வரவேற்றனர். அண்மைக்காலமாக அதிமுகவில் சேருவதற்கு இளைஞர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது. இந்த சூழலில் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நம்பிக்கை
இதனிடையே மற்ற மாவட்டங்களில் எப்படியோ, ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் புது முகங்களையும், இளைஞர்களையும் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்க உள்ளாராம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அதிமுக சீனியர்கள் களையிழந்து காணப்படுகிறார்களாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications