புலி வேஷம் போட்ட பூனையாக ஓடி ஒளிந்துள்ள ராஜேந்திர பாலாஜி.. காங். எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தவறு செய்தால் சட்டத்திற்கு முன்னால் நான் வந்து நிற்பேன் என சொல்ல தைரியம் இல்லாத புலி வேஷம் போட்ட பூனையாக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

    புலி வேஷம் போட்ட பூனையாக ஓடி ஒளிந்துள்ள ராஜேந்திர பாலாஜி.. காங். எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்

    தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து விருதுநகரில் பேச உள்ள பிரதமர் மோடி சிவகாசி பட்டாசு பிரச்சினை குறித்தும் பேச வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ராஜீவ்காந்திக்குப் பிறகு 2-வது பிரதமராக மோடி விருதுநகர் வருகிறார். மோடியை நாங்கள் வரவேற்கிறோம். மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரதமர் வருகை இருக்க வேண்டும்.

    சிவகாசி பட்டாசு

    சிவகாசி பட்டாசு

    மேலும் சிவகாசி பட்டாசு பிரச்சினை குறித்தும், பட்டாசு தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுடன் பேச பிரதமர் மோடி நேரம் ஒதுக்க வேண்டும். காரைக்குடியில் நீரி அமைப்பின் கிளையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    எய்ம்ஸ் மருத்துவமனை

    எய்ம்ஸ் மருத்துவமனை

    மேலும் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து மத்திய அரசிடம் கேட்டால் ஜப்பானின் 90 சதவீத கடனால் நடைபெறுகிறது என பதில் வருகிறது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஜப்பான் பிரதமரிடம் தான் கேட்க வேண்டுமே தவிர பாரத பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டியதில்லை.

    சர்வதேச விமான நிலையம்

    சர்வதேச விமான நிலையம்

    எம்ய்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு நம்முடைய பிரதமர் அவரின் பணியை முடித்து கொண்டார்.

    மேலும் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிற்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வருகிறார். அவர் வரும் போது மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட வேண்டும்.

    லுக் அவுட் நோட்டீஸ்

    லுக் அவுட் நோட்டீஸ்

    முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக உள்ளார். தமிழகத்தில் ஒரு முன்னாள் அமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது இதுவே முதல்முறை. ஆடிய ஆட்டம் என்ன? பேசிய பேச்சுகள் என்ன? என்ற கண்ணதாசன் வரிகளுக்கு எடுத்துக் காட்டாக உள்ளார் ராஜேந்திர பாலாஜி.

    ஓடி ஓளிந்த ராஜேந்திர பாலாஜி

    ஓடி ஓளிந்த ராஜேந்திர பாலாஜி

    தவறு செய்தால் சட்டத்திற்கு முன்னால் வந்து நிற்பேன் என்று சொல்ல தைரியம் இல்லாத புலி வேஷம் போட்ட பூனையாக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரைக் காப்பாற்ற பாஜக துணை நிற்கும் என்றால் அது தவறு. ஒரு நாள் அவருக்கு தண்டனை உண்டு என காங்கிரஸ் கட்சி எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+