"ஒன்னா இருக்கலாம் வா".. தனியா கூட்டிட்டு போய்.. ஜெயாவின் கழுத்தை அறுத்த சரவணன்.. சிவகாசி ஷாக்!

மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: "நாம ஒன்னா இருக்கலாம், வா" என்று நைசாக பேசி அழைத்து வந்து, மனைவி ஜெயாவின் கழுத்தை திடீரென கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் கணவர்.. இந்த அதிர்ச்சி சம்பவம் சிவகாசியில் நடந்துள்ளது.

சிவகாசியை சேர்ந்தவர் சரவணகுமார்.. இவர் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஒன்றரை வருஷத்துக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்தார்.. அந்த வேனில், அதே பட்டாசு தொழிற்சாலையில் வேலைக்கு வந்தவர்தான் ஜெயலட்சுமி.

வண்டியில் வந்து போகவும், நெருங்கி பழகவும், லவ் வந்துவிட்டது.. இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.. ஜெயலட்சுமியின் அம்மா வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். இவர்களுக்கு கயல் என்று 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணம்

திருமணம்

இந்நிலையில், அத்தொழிற்சாலைக்கு ஜெயா வேலைக்கு போய் வந்துகொண்டிருந்தார்.. ஆனால் சரவணகுமார் அந்த வேலையை விட்டுவிட்டார். காதலித்து திருமணம் செய்த சரவணகுமார் வாழ்க்கையில் சந்தேக பேய் உள்ளே நுழைந்தது.. ஜெயலட்சுமி தினந்தோறும் சித்ரவதைக்கு ஆளானார்.

 குழந்தை

குழந்தை

சம்பவத்தன்றும் அந்த ஃபேக்டரி வேலைக்கு போக வேண்டாம் என்று அன்றைய தகராறு வெடித்துள்ளது. இதனால் மனம் நொந்துபோன ஜெயா, குழந்தையை தூக்கி கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். பிறகு சமாதானம் பேசுவதுபோல பின்னாடியே மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்து கொண்டு வந்தார் சரவணன்.

அலறல்

அலறல்

ஆனால், வீட்டிற்குள் நுழைந்ததுமே கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துவிட்டார்.. இதை கொஞ்சமும் எதிர்பாராத ஜெயா, நிலைகுலைந்து அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மகளின் அலறலை கேட்டதும், ஜெயாவின் அம்மா பதறி ஓடிவந்தார். அப்போதுதான் தன்னிடம் பேசிவிட்டு திரும்பிய நிலையில், திடீரென சடலத்தை பார்த்ததும் வெடித்து அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது..

 கைது - விசாரணை

கைது - விசாரணை

தகவலறிந்து சிகவாசி போலீசார் விரைந்து வந்து ஜெயா சடலத்தை மீட்டு போட்ஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர். அதற்குள் சரவணகுமார் எஸ்கேப் ஆகியிருந்தார்.. வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை தேடி வந்த நிலையில், கடைசியில் செங்கமலப்பட்டி ஏரிக்கரையில் ஒளிந்து கொண்டிருந்தார்.. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. தாயும் இல்லாமல், தந்தையும் இல்லாமல் அந்த 8 மாத பிஞ்சு கதறி கொண்டுள்ளது!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+