விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விருதுநகர்:ஆனைக்குட்டம் டேம் ஷட்டர் விவகாரம்-முதல்வருக்கு 1000போஸ்ட் கார்டுகளை அனுப்பிய நாம் தமிழர்

Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர்களை சீரமைக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தை நடத்தி உள்ளது நாம் தமிழர் கட்சி.

சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!

விருதுநகரின் பிரதான குடிநீர் ஆதாரம் ஆனைக்குட்டம் அணைதான். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பாய்ந்தோடும் நீர் அர்ஜூனா நதி வழியாக ஆனைகுட்டம் அணைக்கு வருகிறது.

 ஆனைகுட்டன் அணையால் பலன்

ஆனைகுட்டன் அணையால் பலன்

21 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர் மூலம் சுமார் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி நடைபெறுகிறது. ஆனால் இந்த அணையில் போதுமான நீர் இருப்பு எப்போதும் இருப்பதே இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

 மதகுகளால்ல் சிக்கல்

மதகுகளால்ல் சிக்கல்

ஏனெனில் இந்த அணையின் ஷட்டர்களை அமைத்திருக்கும் முறையால் நீர் வீணாகிப் போகிறது; அணையில் இருந்து ஒருமுறை நீர் திறந்துவிடப்பட்டால் மீண்டும் ஷட்டரை மூட முடியாத அளவுக்கு விசித்திரமாக அமைத்துள்ளனர்; ஆகையால் இதனை சீரமைக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.

 அதிகாரிகள் மெத்தனம்

அதிகாரிகள் மெத்தனம்

ஆனால் ஆனைகுட்டம் அணை தொடர்புடைய அதிகாரிகள் இந்த பிரச்சனையில் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் அஞ்சல் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

 அஞ்சல் அட்டைகள் போராட்டம்

அஞ்சல் அட்டைகள் போராட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுக்கு சுமார் 1,000 அஞ்சல் அட்டைகளில் தங்களது கோரிக்கையை தெரிவிக்கும் போராட்டத்தை பொதுமக்கள் ஆதரவுடன் நாம் தமிழர் கட்சியினர் இன்று நடத்தினர். ஏராளமான பொதுமக்கள் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

English summary
Naam Tamiar Party has urged that the Tamilnad Govt should repair the shutters of Anaikuttam Dam, Virudhunagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X