புடவையை செருகிக் கொண்டு.. டூவீலரை கிளப்பிக் கொண்டு.. 2வது மொட்டை.. கலக்கிய நிர்மலா தேவி!
2-வது முறையாக மொட்டை தலையுடன் நிர்மலாதேவி வந்திருந்தார்
Recommended Video
அருப்புக்கோட்டை: 2-வது மொட்டை.. புடவையை செருகிக் கொண்டு.. டூவீலரை கிளப்பி கொண்டு கோர்ட்டில் இருந்து பறந்தார் நிர்மலாதேவி!
பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை போனில் பேசி, தவறான பாதைக்கு அழைத்த வழக்கு இன்னமும் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. அதனால் ஜாமீனில் வெளியே வந்தாலும், இந்த வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி அடிக்கடி கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

ஒவ்வொரு முறை இவர் கோர்ட்டில் ஆஜர் ஆகும்போதும், தமிழக மக்களால் கவனிக்கப்படுகிறார். இதற்கு காரணம், இவரது நடை, உடை, பேச்சு, செய்கைகள்தான்!
ஆரம்பத்தில், தலைநிறைய பூ, காட்டன் சேரி என கலக்கலாக வந்த நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் திடீரென மாற தொடங்கின. தலைமுடியை அவிழ்த்து விட்டு கொள்வதும், தலைமுடியை அவரே வெட்டி கீழே போடுவதும் என திகிலை தந்தார்.
மனநல சிகிச்சை எடுத்து கொண்ட பிறகு திடீரென மொட்டை தலையுடன் ஒருநாள் கோர்ட்டில் நுழைந்தார். இதையடுத்து கடந்த முறை வந்தபோதும், மொட்டையடித்த தலையில் கொஞ்சம் முடி வளர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடந்ததால், கோர்ட்டில் ஆஜராக வந்திருந்தார்.
ஆனால் 2வது முறையாக மொட்டை தலையுடன் வந்திருந்தார். இந்த மொட்டை எதற்காக என்று தெரியவில்லை. ஆனால், வழக்கிலிருந்து சீக்கிரமாக விடுதலை ஆக வேண்டும் என்பதற்காக இப்படி 2-வது மொட்டை அடித்துள்ளதாக தெரிகிறது. சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில்தான் இந்த மொட்டை போட்டதாக சொல்லப்படுகிறது.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் அக்டோபர் 4-ம் தேதிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, திரும்பவும் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவியை வழக்கம்போல் அங்கிருந்த செய்தியாளர்கள் சூழ்ந்து போட்டோ எடுத்தனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத நிர்மலாதேவி, புடவையை தூக்கி செருகி கொண்டு, ஹெல்மட் எடுத்து மாட்டியபடி.. டூவீலரில் பறந்தார்.












Click it and Unblock the Notifications