டிவி பார்க்க போன சிறுமி... சீரழித்து கர்ப்பமாக்கிய முதியவர் - அருப்புக்கோட்டையில் அராஜகம்
டிவி பார்க்க போன வீட்டில் இருந்த முதியவர் தனது பேத்தி வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கியுள்ளான். இந்த கொடூர சம்பவம் அருப்புக்கோட்டை அருகே நிகழ்ந்துள்ளது.
விருதுநகர்: சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே தர்மம் கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா என்ற முதியவர் தனது காம இச்சையை பேத்தி வயது சிறுமியிடம் தீர்த்துக்கொண்டுள்ளார். இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். கொடுமை செய்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒன்பதாவது படிக்கும் மாணவி அமுதா. ( பெயர் மாற்றப்பட்டது) பெற்றோர்கள் இல்லாததால் அத்தை வீட்டில் தங்கி படித்து வந்தார். பக்கத்து வீட்டில் டிவி பார்க்க போன போது அங்கிருந்த கருப்பையா அந்த சிறுமியை பாலியல் ரீதியாக அணுகியுள்ளார். விபரம் தெரியாத சிறுமியும் பேசாமல் இருக்க அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலாத்காரம் செய்து விட்டார்.
5 மாதகாலமாக இது தொடர்ந்துள்ளது. சிறுமி கேட்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு தனது காம இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டார். தாத்தா வயது என்பதால் அக்கம் பக்கத்தினரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஒருநாள் அமுதா வீட்டில் சோர்வாக இருந்தாள். மயங்கி விழவே, டாக்டரிடம் அழைத்துச்சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறி சிறுமியின் அத்தையை அதிரவைத்தனர்.
சிறுமியின் அத்தை விசாரித்ததில் கருப்பையாதான் இதற்குக் காரணம் என்று தெரியவந்தது. இதனையடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கருப்பையாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பேத்தி வயது என்றும் பாராமல் சிறுமியை முதியவர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications