நவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற 8ம் தேதி வரை சதுரகிரி மலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து வர அனுமதி வழங்க்பட்டுள்ளது.
ஆனால், கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருப்பதால் தற்காலிகமாக பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் நேற்று முந்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சதுரகிரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற 60 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்காமல் நவராத்திரி திருவிழாவுக்காக மலைப் பகுதியில் கோவிலில் தங்கி தரிசனம் செய்து வருகிறார்கள்.
மேலும் நீர்வரத்து குறையும் வரை யாரும் இறங்க வேண்டாம் என வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக விருதுநகர் தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழு தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சதுரகிரி கோயிலுக்கு செல்லும்வரை பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தாணிப்பாறை பகுதியில் நீர் வரத்து குறையும் வரை பக்தர்கள் மேலே சென்று சாமி தரிசனம் செய்துவர தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
