பொன்னமராவதி விவகாரம்... 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்... விருதுநகர் அருகே பரபரப்பு
விருதுநகர்: பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக, விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வைரலானது. இதனால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவதூறு பரப்பியவர்களை கைது செய்யவில்லை எனக்கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் காவல் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரி கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால், 3 போலீசார் காயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதால் தடியடி சம்பவம் நடைபெற்றது.
மேலும், புதுக்கோட்டையின் பல்வேறு கிராமங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கலவரம் பரவியதால், போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பரப்பிய தஞ்சை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குகன் என்பவரை கைது செய்தனர்.
அவரை பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், கீரனூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரையும் தேடி வருகின்றனர். அதே நேரம், வாட்ஸ் அப் நிறுவனத்திற்கும் போலீசார் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், அவதூறு ஆடியோவை வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் ஆத்திப்பட்டியில் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும், போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications