விருதுநகரில் அமைச்சர் பேசும்போதே மின் தடை.. வேண்டும் என்றே பவர் கட்? இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியின் போது சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசத் தொடங்கிய போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. சமீப நாட்களாகவே அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்வுகளின் போது மின்வெட்டு ஏற்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் மீண்டும் பேசுபொருளானது. இந்நிலையில் இந்த மின்வெட்டு தொடர்பாக, மின்வாரிய இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் ஜெகதீஸ்வரி பேசுவதற்காக மைக்கை கையில் எடுத்த அடுத்த நொடியே திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அரங்கம் அப்படியே அமைதியானது.

Power cut while Minister is speaking in Virudhunagar Junior Assistant suspended

திடீரென மின் தடை

அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி என்ன ஆச்சு என கேட்டு திகைத்து நின்றனர். சிறிது நேரம் காத்திருந்தும் கரெண்ட் வரவில்லை. இதனால் அவர் உடனடியாக பேச தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அறிவுறுத்திய பிறகு ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டது. பிறகு அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசத் தொடங்கினார்.

விருதுநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை திடீர் திடீரென ஏற்படுவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குக் கூட முன்னேற்பாடாக முறையாக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதற்கு நிர்வாக குளறுபடியே காரணம் என பலரும் குற்றம்சாட்டினர்.

இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

இந்நிலையில் பணியில் அலட்சியமாக இருந்ததாக சூலக்கரை மின்வாரிய இளநிலை உதவியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, மாவட்ட நிர்வாகத்தின் தலைமை மையமாக விளங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் எந்த விதத் தடையும் இல்லாமல் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின்சார வாரியம் உறுதி செய்வது வழக்கமான நடைமுறை. இதன்படி நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வில் மின் தடை ஏற்படாதவாறு கண்காணித்து இருக்க வேண்டும்.

மின் தடை ஏற்பட்டால் கூட உடனடியாக மாற்று மின் இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கலாம். ஆனால் நேற்று மின் தடை ஏற்பட்ட போதும் கூட உடனடியாக மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அமைச்சர், அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் அமர்ந்திருக்கும் நிகழ்வில் திடீரென அங்கு கரண்ட் இல்லாமல் போனது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியது.

கவனமின்றி அலட்சியம்

ஏற்னகவே பல முறை அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடை ஏற்படுவதும், அதற்கு எதாவது காரணம் சொல்லப்படுவதும் தொடர்கதையாகி வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வேண்டும் என்றே சர்க்யூட் பிரேக்கரை இயக்கியதால் தான் மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், அப்பகுதிக்கு பொறுப்பான இளநிலை உதவியாளர் கவனமின்றி அலட்சியமாக செயல்பட்டதும், முன்னெச்சரிக்கை பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அத்தியாவசியமான மின் இருப்பை உறுதி செய்வது மின் ஊழியர்களின் கடமையாகும். மின் பாதைகள், மின்மாற்றிகள், மாற்று மின் சாதனங்களைச் சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம். ஆனால், விருதுநகர் நிகழ்ச்சியில் இந்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்ததை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+