அவரு 40 கோடியை பதுக்கி வச்சிருக்காரு.. எப்ப ரெய்டு வர போகுதோ.. ராஜேந்திர பாலாஜி போடும் குண்டு!
அமமுக வேட்பாளர் பணம் பதுக்கி உள்ளார் என அமைச்சர் புது தகவலை கிளப்பி உள்ளார்.
Recommended Video

சாத்தூர்: "அமமுக வேட்பாளர் 40 கோடி ரூபாயை பதுக்கி வைச்சிருக்கார். அவர் வீட்டுக்கு எப்போது வருமான வரித்துறையினர் வந்து சோதனை செய்ய போறாங்களோ தெரியவில்லை" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பகீரை கிளப்பி உள்ளார்.
சாத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது கிட்டத்தட்ட எல்லா கட்சியையும் வறுத்தெடுத்து விட்டார்.

அப்போது அவர் சொன்னபோது, "சினம் கொண்ட அதிமுக எனும் சிங்கத்திடம், திமுக என்ற மதம் கொண்ட யானை தோற்று ஓடும்.
கொடநாடு விவகாரத்தில் முதல்வரை அப்படி கேள்வி கேட்டாரே முக ஸ்டாலின்? இப்போது அவரது கட்சிக்காரங்க வீட்டிலேயே கட்டுக்கட்டா பணம் எடுத்திருக்காங்களே.. அதை பத்தி ஏன் வாய் திறக்கவில்லை. கொள்ளையடித்த பணம் இருந்தால், கண்டிப்பாக வருமான வரித்துறையினர் சோதனை செய்யதான் செய்வார்கள்.
இப்போது சாத்தூர் அமமுக வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் 40 கோடி ரூபாயை பதுக்கி வைச்சிருக்கார். அவர் வீட்டுக்கு எப்போது வருமான வரித்துறையினர் வந்து சோதனை செய்ய போறாங்களோ தெரியவில்லை.
ஈவிகேஎஸ் ஒரு நகைச்சுவை பேர்வழி.. அவருக்கெல்லாம் யாரும் ஓட்டுப்போட மாட்டாங்க. மக்கள் நீதி மய்யம் கட்சி களத்திலேயே இல்லை" என்று கூறினார்.
ஏற்கனவே வாயை கொடுத்து மதுரை ஆதீனம், தினகரனிடம் வாங்கி கட்டி கொண்டார். இப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதுசா ஒரு குண்டு போட்டுள்ளதால், இது எப்போது வெடித்து கிளம்ப போகிறதோ?!












Click it and Unblock the Notifications