யாரு நானா ரவுடி.. தினகரன் விமர்சனத்திற்கு ராஜேந்திர பாலாஜி ரகளை பதில்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Rajendra balaji replies to Dinakaran | தினகரன் விமர்சனத்திற்கு ராஜேந்திர பாலாஜி பதில்!

    விருதுநகர்: என்னை ரவுடி என்கிறார் தினகரன். நானா ரெளடி. அவர் கூட உள்ளவர்வர்கள்தான் குண்டர்கள் போல் செயல்படுகிறார்கள். அதை கண்டிக்க கூடாதா? கண்டித்தால் தப்பா. உண்மையை சொன்னால் கசக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, 21சட்டமன்ற இடைத் தேர்தல் எங்களுக்கு முக்கியம்தான் அதில் என்ன சந்தேகம். எடப்பாடி ஆட்சியை தக்க வைக்க எங்களுடைய இலக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். அது உண்மைதான் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். ஒ பிஎஸ் விஜயகாந்த்தை சந்தித்ததன் மூலம் அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது என்றார். அவரது பேட்டியிலிருந்து...

    Also Read | மிரண்டு போய் ; அரண்டு போய் உள்ளார் மு.க. ஸ்டாலின்... முதல்வர் காரசார பேச்சு

    நானா ரவுடி

    நானா ரவுடி

    என்னை தினகரன் ரவுடி என்கிறார். நானா ரவுடி. அவர் கூட உள்ளவர்வர்கள் குண்டர்கள் போல் செயல்படுகிறார்கள். அதை கண்டிக்க கூடாதா? கண்டித்தால் தப்பா. உண்மையை சொன்னால் கசக்கும்.

    பண்ணையா திண்ணையா

    பண்ணையா திண்ணையா

    அமமுக வெற்றியை ராஜேந்திர பாலாஜி திண்ணையில் உட்காந்து பார்ப்பார் என்று கூறியுள்ளார் தினகரன். நாங்கள் திண்ணையில் உட்காருவோமா, இல்லை அவர் பண்ணையில் உட்காருவாரா என்று என்று தேர்தலுக்கு பின் பார்ப்போம்.

    தைரியமான பிரதமர் மோடி

    தைரியமான பிரதமர் மோடி

    தைரியமான, நேர்மையான பிரதமராக மோடி உள்ளார். வலுவான பாரதம், வல்லரசு நாடு உருவாக நரேந்திர மோடி பிரதமர் ஆக எங்க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

    சட்டசபை இடைத் தேர்தல்

    சட்டசபை இடைத் தேர்தல்

    21 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் எங்களுக்கு முக்கியம்தான். அதில் என்ன சந்தேகம். எடப்பாடி ஆட்சியை தக்க வைக்க எங்களுடைய இலக்கு சட்டமன்ற தொகுதி. தினகரன் திருந்தி அதிமுக விற்கு வந்தால் ஏற்று கொள்வீர்களா என்றால் அதை முதல்வர் , துணை முதல்வரிடம் தான் கேட்கனும். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என கூறலாம்.

    அவருடன் இல்லை

    அவருடன் இல்லை

    அவர்கள் குடும்பத்தில் எனக்கு உதவியவர்கள் தற்போது அவரிடம் இல்லை. அவர் தனிமரமாக உள்ளார். அவர் வெற்றிக்கு நாங்கள் பணியாற்றிருப்போம், அவர் உதவி செய்திருப்பார். அரசியல் ரீதியான உறவு. அதற்காக அதிமுக வை அவர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்க்க முடியாது. டிடிவி நடவடிக்கை அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலும், திமுக ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வர் எடப்பாடி மீது அவதூறு பேசுவதால் என்னை போன்றவர்கள் பேசுகிறோம். தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவது எனக்கு இயல்பு கிடையாது, மரபு கிடையாது என்றார் அவர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+