விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    முதியோர், கர்ப்பிணிகள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்கவும்... மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

    ஸ்ரீவில்லிபுத்தூர்: அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரத்தில் வரதராஜர் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு ஆகம பூஜைகள் செய்யப்பட்டு அவர் கடந்த 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    சுமார் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளிக்கும் அவர் 24 நாட்கள் அனந்தசயன கோலதச்திலும், மீதமுள்ல 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார்.

    ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது!? ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது!?

    தரிசனம்

    தரிசனம்

    இந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் பெட்டியில் வைக்கப்பட்டு குளத்தில் வைக்கப்படுவார். இந்த நிலையில் கடந்த 21 நாட்களாக 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

    ஏற்பாடுகள்

    ஏற்பாடுகள்

    தினமும் அத்திவரதரை தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது. இதில் முண்டியடித்துக் கொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ததால் ஏற்கெனவே 5 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    இந்த நிலையில் அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது என சடகோப ராமானுஜ ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தித்து பேசினார்.

    மடாதிபதிகள்

    மடாதிபதிகள்

    அப்போது அவர் கூறுகையில் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது. கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்கடியில் வைத்திருந்தனர். தற்போது அது தேவையில்லை என்பதால் முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய ஒரு கருத்துக்கு பதிலளித்த ஜீயர் எங்களுக்கு சோடா பாட்டில் வீசத் தெரியும் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்போது அத்திவரதர் குறித்தும் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

    English summary
    Srivilliputhur Sadagoba Jeeyar says that Athivaradhar should not be kept inside the ground hereafter. Its unnecessary to keep there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X