காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் எங்களை விட குறைவான வாக்குகளையே பெறுவீர்.. சீமான் ஆவேசம்
Recommended Video
அருப்புக்கோட்டை: காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது சவாரி செய்தே தேர்தலை சந்தித்து வருகின்றனர். ஒருவேளை அக்கட்சி தனித்து போட்டியிட்டால் எங்களைவிட வாக்குகள் குறைவாகவே பெறும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக 7 தமிழர்கள் தண்டனை பெற்று வருகின்றனர்.
அவர்களை விடுவிக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அந்த கோப்பில் ஆளுநர் கையெழுத்திடவில்லை.

சீமான் சந்திப்பு
இந்த நிலையில் 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்து அருப்புக்கோட்டையில் தனது தாயுடன் தங்கியுள்ளார். அவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

காலம் தாழ்த்துவது
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரவிச்சந்திரன் 28 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். 7 பேரையும் விடுதலை செய்யும் கோரிக்கையை நிராகரிக்காமலும் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்வது போல் உள்ளது.

காங்கிரஸ்
7 பேர் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி நோட்டாவுடன் மட்டுமே போட்டி போட முடியும் என காங்கிரஸ் எம்பி தெரிவித்திருந்தார்.

வாக்குகள்
நாங்கள் தனித்து தேர்தலில் நின்று 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது குதிரையேறியே தேர்தலை சந்தித்துள்ளனர். தனித்து நின்றால் நாங்கள் பெறும் வாக்குகளை விட அவர்கள் குறைவாகவே பெறுவர் என தெரிவித்துள்ளார்.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
ஓரே வருஷத்தில் மதுக்கடைகள் மூடப்படும்.. கல்விக்கடன் தள்ளுபடி.. சீமான் தேர்தல் வாக்குறுதி -
40, 50 கோடி செலவு பண்ணுவாங்க.. கையை கட்டிட்டாரு சீமான்! திரள்நிதி தான் கேக்குறாரு!உருக்கமாக வீடியோ -
நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை.. அன்பான சர்வாதிகார ஆட்சி டூ திருச்சி தலைநகரம்.. சீமான் அதிரடி -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications