சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகி தொழிலாளி பலி - 2 பேர் கைது
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்: சிவகாசி அருகே எம் துரைச்சாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 2 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.
சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட எம் துரைச்சாமிபுரம் பகுதியில் ராஜு என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கப்படும். இந்த ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பணி முடிந்து தொழிலாளர்கள் சென்ற நிலையில் அறையில் வைத்திருந்த மீதி மருந்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வீரியம் கூடியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள கதவுகளை திறக்க தொழிலாளர்கள் 3 பேர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வைத்திருந்த மீதி மருந்தின் காரணமாக திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாகின. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி தொழிலாளர் தர்மராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் இருக்க தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகன், கந்தசாமியை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிவிபத்து தொடர்பாக வருவாய்த் துறையினர் சம்பவ இடம் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்ற சிவகாசியில் கடந்த 2 மாதத்தில் 7க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 37க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் தீக்காயம் அடைந்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications