பர்த்டேவை கிராண்டா கொண்டாட விடல.. தற்கொலை செய்துகொண்ட விருதுநகர் மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்!
விருதுநகர் : பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட பெற்றோர் மறுத்ததால் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலை விக்னேஷ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவர் விருதுநகரில் மருத்துவமனை மற்றும் மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (21) ரஷ்யா அருகே உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள ஜலாலாபாத் பல்கலைகழகத்தில் எம்.பி.பி.எஸ் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் லோகேஷ் விடுமுறையில் விருதுநகருக்கு வந்து உள்ளார். இந்த நிலையில் லோகேஷ் தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 11ஆம் தேதி சிறப்பாக கொண்டாட வேண்டும் என விரும்பினாராம்.
அதற்கு லோகேஷின் பெற்றோர் எளிமையாக கொண்டாடுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த லோகேஷ் நேற்று இரவு அதிகளவில் தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து லோகேஷின் பெற்றோர் அவரை விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு லோகேஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவ மாணவர் தற்கொலை குறித்து அவரது தந்தை ஆனந்தராஜ் அளித்த தகவலின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!











Click it and Unblock the Notifications