வீடு புகுந்து அடிக்குறாங்க.. தமிழிசை வைத்த பகீர் குற்றச்சாட்டு! சிஎம் விஜய்க்கு முக்கிய கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தவெக அரசு ரீல்ஸ் கலாச்சாரத்தில் இருந்து மாறி ரியல் உலகத்திற்கு வர வேண்டும் எனவும், வீடு புகுந்து அடிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார். மேலும், விஜய் அவர்கள் விமர்சித்தது என்பதற்காக ஒரு மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோயில்கள் எல்லாம் எந்த அளவிற்கு முன்னோர்களால் பேரரசர்களால் மக்களால் பாதுகாக்கப்பட்டது.

Tamilisai Soundararajan Vijay TVK

அதற்கு என்று நிலங்கள் இருந்தது. அந்த நில வருமானம் கோயிலுக்கு அலங்காரத்திற்கும் திருவிழாக்களுக்கு மக்களுக்கும் உதவியாக இருந்தது. உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாமல் தான் வழிபடுகின்ற இறைவனுக்கு இவ்வளவு தானங்களை செய்தது நாடு தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

தமிழிசை சௌந்தரராஜன்

ஆனால் இன்று காலம் காலமாக தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என்பது வேதனையான விஷயம். கோயில் சொத்துக்கள் மக்களுக்கு பலன் தரும் அளவுக்கு தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு பேர் அதை பயன்படுத்தினாலும் நிறைவாக கோயிலுக்கானது. ஆனால் இங்கே கரூர் பழநி கோயில் சொத்துக்கள் அதிக அளவுக்கு கோயிலுக்கு இல்லாமல் அது சூறையாடப்பட்டு கொண்டிருக்கிறது என்பது வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதனால் தமிழக அரசு கரூரில் உள்ள கோயில் நிலங்கள் கோயிலுக்கான நிலங்கள்‌. அதற்கு என தனி பிரிவு ஏற்படுத்தி தீர விசாரிக்கப்பட வேண்டும்.

கோயில் சொத்துக்கள்

எந்த வகையிலும் கோயில் சொத்துக்கள் அபகரிக்கப்படக்கூடாது என்பதில் எல்லோரும் தெளிவாக இருக்க வேண்டும் என்பது இது ஒரு தாழ்மையான கருத்து. அதே போல் பழனியில் 100 கோடி மதிப்பிலான பழனியாண்டவரின் சொத்துக்கள் இரண்டு கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பழனி ஆண்டியாக இருந்தாலும் அவர் அனைவருக்கும் மிக மிக செல்வத்தை கொடுத்து வருகிறார். அவரோட சொத்தை சுரண்டும் அளவுக்கு நிகழ்வுகள் நடைபெறுவது ஒத்துக் கொள்ள முடியாது.

திருப்பரங்குன்றம்

தமிழக அரசு ஒவ்வொரு கோயிலுக்கும் எவ்வளவு நிலங்கள் இருக்கிறது. எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அதற்கான சொத்துக்கள் எவ்வளவு. எந்த அளவிற்கு அரசாங்கம் அதை பாதுகாக்கிறது என்பதை முழுமையான அறிக்கையாக தயார் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் விஷயத்தில் ஒவ்வொரு இந்துவின் உணர்வும் கோயில் தூணில் விளக்கேற்ற வேண்டும் என்பது. கடந்த ஆட்சியில் மத வேற்றுமை காரணமாக பூரண சந்திரன் போன்ற உயிர் நீத்த பிறகும் விளக்கேற்ற முடியாமல் உள்ளது.

இந்து விரோத போக்கு

இதே நிலை இந்த ஆட்சியில் தொடரக்கூடாது. கடந்த ஆட்சியை மக்கள் நிராகரித்ததற்கு காரணம் இந்து விரோத போக்கு தான். இந்த ஆட்சி இந்து விரோத போக்கை கைவிட்டு இந்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் உச்ச நீதிமன்றம் சென்றது தவறானது. கட்சிகள் இந்து இயக்கங்கள் அமைப்புகள் என்று எடுத்துக் கொள்ளாமல் திருப்பரங்குன்றத்தில் எல்லோரும் சாமானிய மக்கள்தான் போராடினார்கள். இந்த அரசு இந்து கோயில்கள் மீதும் இந்து மத உணர்வு மீதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தவெக அரசு

தவெக அரசு வேகம் எடுத்து மக்களுக்கான பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். நியாயமாக சென்று ஆய்வு நடத்தினால் தவறில்லை. அதை ரீல்ஸ் எடுத்து பரிகசிக்கக்கூடிய வகையில் செய்யாமல் தீவிரமான மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருக்க வேண்டும். ரீல் மாறி ரியல் உலகத்திற்கு வர வேண்டும். காமராஜர் மக்களுக்காக அதிகம் சிந்தித்தார். அவருக்கு விழா எடுக்கிறோம். மக்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் கரூருக்கு சென்றார். வசனம் பேசினாரே தவிர மக்களை இன்னும் அவர் சந்திக்கவில்லை.

விஜய்

நேற்றைய தினம் முதல்வர் விஜயிடம் புகார் கொடுக்க சென்ற பெண் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்க்கப்பட வேண்டும். புகார் கொடுக்க அதிக கூட்டம் வந்தால் சரியாக நிர்வகித்து பொதுமக்களை பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. வீடு புகுந்து அடிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கஞ்சா கைது செய்யப்பட்ட ஒருவர் லாக்கப் மரணம் அடைந்துள்ளார். விஜய் அவர்கள் விமர்சித்தது என்பதற்காக ஒரு மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+