பெண் தலையில் ஒரே போடு.. கோரிக்கை விடுத்தவரை தாக்கிய அமைச்சர் - பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ
விருதுநகர்: கோரிக்கை விடுத்த பெண்ணின் தலையில் தமிழ்நாடு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அழைப்பிதழ் அட்டைகளை கொண்டு தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
தமிழ்நாடு அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும், திமுகவின் மூத்த நிர்வாகியாகவும் இருப்பவர் அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

கோயில் திருவிழா
இந்த நிலையில் இவர் தனது சொந்த மாவட்டமான விருதுநகர் சென்ற இவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வந்தார். நேற்று அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரமோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து இழுத்தார்.

பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி
அதேபோல் பள்ளிசாரா மற்றும் வயது வந்தவர்களுக்கான கல்வி திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் தன்னார்வலர்களுக்கான பணிமனை பயிற்சி தொடக்க விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ராமச்சந்திரனுடன் சான்றிதழ்களை வழங்கினார்.

சுகாதாரத்துறை நிகழ்ச்சி
அதன் பின்னர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினவிழா நடைபெற்றது. சுகாதாரத்தூறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ரூ.4.31 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

பெண்ணை தாக்கிய அமைச்சர்
இந்த நிலையில், விருதுநகர் பாலவனத்தம் கிராமத்தில் தன்னிடம் மனு அளிக்க வந்த ஏழை பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 12 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் தன்னிடம் கை நீட்டி பேசும் பெண்ணின் தலையில், அழைப்பிதழ்களை கொண்டு அமைச்சர் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications