“ஏழை பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு”- ஆர்ப்பாட்டத்தில் தங்கம் தென்னரசு பேச்சு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: "சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வரும் சிறு, குறு வியாபாரிகளின் கடையில் ஆய்வு என்ற பெயரில் சென்று ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு." என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில், தவெக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Thangam Thennarasu

சிவகாசியில் லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையில் ஆய்வுகளை நடத்தி, பல ஆலைகளை மூடிய தவெக அரசின் போக்கைக் கண்டித்த திமுக சார்பில், சிவகாசி பேருந்து நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு, "மாற்றம் தருவோம் என கூறி ஆட்சிக்கு வந்த தவெக, பயிர்க்கடனை தள்ளுபடி செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த தவெக, நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிதியையே குறைத்துவிட்டது. ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்காக திமுக அரசு ஒதுக்கிய நிதியையும் தவெக அரசு பறித்துவிட்டது.

திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கான நிதியை குறைப்பது மட்டுமல்லாமல், திமுக-வின் மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களையும் மாற்றி வருகிறீர்கள். வெற்றி என அனைத்து திட்டங்களுக்கும் பெயர் வைக்கும் தவெக அரசு, அது வெற்றி திட்டமாக இல்லை. வெற்றுத் திட்டமாகத் தான் உள்ளது.

பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வரும் சிறு, குறு வியாபாரிகளின் கடையில் ஆய்வு என்ற பெயரில் சென்று ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு.

"பட்டாசு தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு தருவோம். பட்டாசு ஆலை உள்ள ஒவ்வொரு 10 கிலோமீட்டர் தூரத்திற்கும் நடுவே தீயணைப்பு நிலையம் அமைப்போம்" என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, அது குறித்து நிதிநிலை அறிக்கையில் அறிவிக்காதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+