ஸ்டாலினுக்கு மோடி ஃபோபியா நோய்.. அதான் எப்பவும் மோடியை குறை சொல்றாரு.. சொல்வது பாஜக சீனிவாசன்!
விருதுநகர்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிஜேபி ஃபோபியா, மோடி ஃபோபியா என்னும் நோய் உள்ளது. அதனால் தான் எதற்கெடுத்தாலும் மோடியை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், குடியுரிமைச் சட்டத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்றும் சீனிவாசன் கூறினார்.
இடஒதுக்கீட்டிற்கும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கும் எந்தவிதமான சம்மந்தம் இல்லை என்றும் தமிழக பாஜக பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத் வருகிறார்
விருதுநகரில் பாஜக தேர்தல் அலுவலகத்தில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற 27-ம் தேதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து மார்ச் 31-ம் தேதி உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விருதுநகரில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மாணவர்களுக்கு டேப்லட்
பட்டாசு தொழிலாளர்களுக்கு 4 லட்சத்திற்கான இலவச விபத்துக் காப்பீட்டு திட்டம் செய்து கொடுப்போம். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா டேப்லட் வழங்குவோம். இடஒதுக்கீட்டிற்கும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது தனியார் துறை வீரியமாக இல்லை என்பதால் அரசாங்கம் தலையிட்டு அதனை எடுத்து செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. தற்பொழுது தனியார் துறை பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளதால் அரசாங்கம் அந்த சுமையை தூக்க வேண்டிய அவசியமில்லை.

ஸ்டாலினுக்கு மோடி ஃபோபியா
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த 5 வருடமாகவே பிஜேபி ஃபோபியா, மோடி ஃபோபியா என்னும் நோய் உள்ளது. அதனால் தான் எதற்கெடுத்தாலும் மோடியை குறை சொல்லிக் கொண்டே கடந்த 5 வருடமாக அரசியலை ஒட்டிக்கொண்டிருக்கிறார். குடியுரிமை சட்டத்தை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தெளிவற்ற வகையில் பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவர்கள் இரண்டு சமயம் தான் வாய் திறப்பர்கள். ஒன்று சாப்பிடும் பொழுது இன்னொன்று பொய் சொல்லும் பொழுது.

குடியுரிமைச் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாதகமில்லை
இது பாலகிருஷ்ணனின் அறிவு நாணயமற்ற செயல். குடியுரிமைச் சட்டம் என்றால் என்ன என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். சிறுபான்மையின மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவதற்காகவே பாஜகவை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். குடியுரிமைச் திருத்தம் சட்டம் சம்மந்தமாக பிஜேபியுடன் நேருக்கு நேர் விவாதிக்க திமுக அதன் கூட்டணி கட்சிகள் தயாரா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமைச் சட்டத்திற்கும் எந்த விதமான சம்மந்தம் இல்லை. வெகுமதி பெறுவது பரிசு பெறுவது எல்லாம் ஊழல் இல்லை என்று ஊழலுக்கு புதிய விளக்கத்தை கொடுத்த கட்சி திமுக என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications