முரட்டு அடிமை எடப்பாடி.. முட்டு சந்தில்தான் நிற்கனும்! அதிமுகவை விட்டு விளாசிய உதயநிதி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க.. ஆனால் முரட்டு அடிமைகள் தெரியுமா? எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை என விருதுநகரில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். மோடியின் காலையும், அமித்ஷாவின் காலையும் பார்த்துக் கொண்டே நடந்தால்.. உங்களை போன்று முட்டு சந்தில் தான் போய் நிற்க முடியும் என்றும் உதயநிதி விமர்சித்து பேசினார்.

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

Udhayanidhi Stalin Launches Sharp Attack on Edappadi Palaniswami in Virudhunagar

ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி தாரேன்

திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தை, இன்றைய தென் மண்டலக் கழக இளைஞரணிச் செயலாளர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ஓவர் டேக் செய்துவிட்டது. இங்கு வந்திருக்கும் இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கின்ற போது, இது நிர்வாகிகள் சந்திப்பா? அல்லது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடா? என தோன்றுகிறது.

திருவிழா கூட்டத்தில் பிள்ளை பிடிக்கிற கோஷ்டிகள், பிட் பாக்கெட் அடிக்கிற கோஷ்டிகளும் உள்ளே வருவாங்க.. மிட்டாய் வாங்கி தாரேன்.. ஐஸ்கிரீம் வாங்கி தாரேன்.. சாக்லேட் வாங்கி தாரேன்.. குழந்தைகளை கடத்த பார்ப்பாங்க.. இப்போ அதே மாதிரி ஆரம்பிச்சிருக்காங்கா.

ஈடி கேஸ், ஊழல் வழக்கு

ஈடி கேஸில் இருந்து உங்கள காப்பாத்துறேன்.. பெரா கேஸில் இருந்து உங்கள காப்பாத்துறேன்.. மெடிக்கல் காலேஜ் ஊழல் கேஸில் இருந்து காப்பாத்துறேன்.. சம்பந்தி டெண்டர் எடுத்த கேசினை நாங்க முடிச்சு தரோம்.. என்று கேஸுகளை எல்லாம் காட்டி.. காட்டி பாசிச சக்திகள் அடிமை கூட்டத்தை வாங்கியிருக்காங்க..

இந்த மிரட்டலுக்கு எல்லாம் அடிமை அதிமுக வேண்டும் என்றால் பயப்படலாம். ஆனால் திமுகவின் தொண்டன் எந்த உருட்டல் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டான். ஏனென்றால் எங்களை வழிநடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவர். பாசிசம் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி.. தமிழ்நாடு என்றைக்குமே உங்க கையில சிக்காது..

முரட்டு அடிமை யார் என்றால்

பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக பயப்படாது. எப்போதும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும். எங்க தலைவர் ஸ்டாலின் சொல்கிற மாதிரி உங்களுக்கு தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்..

எடப்பாடி பழனிசாமி அவர்களே தலையை நிமிர்த்தி வழியை பார்த்து நடந்தால்தான் நேராக நடக்க முடியும்.. நீங்கள் மோடியின் காலையும், அமித்ஷாவின் காலையும் பார்த்துக் கொண்டே நடந்தால்.. உங்களை போன்று முட்டு சந்தில் தான் போய் நிற்க முடியும். முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க..

இந்தியாவிலேயே இளைஞர் அணிக்கு

ஆனால் முரட்டு அடிமைகள் தெரியுமா? எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை.. தேர்தல் என்றால் தான் தமிழ்நாடு பிரதமர் மோடிக்கு நியாபகம் வரும். இப்போது தமிழகத்திற்கு தேர்தல் வர இருப்பதால் இனி மோடி திருக்குறள் சொல்வார். எப்போதும் மக்களுடன் மக்களாக களத்தில் நிற்பவர் தான் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் உத்தர பிரதேசம் இன்னும் 6 சதவீதத்தை கூட எட்டவில்லை.

இந்தியாவிலேயே ஒரு கட்சியின் இளைஞர் அணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளையும், 50 லட்சம் உறுப்பினர்களையும் கொண்ட ஒரே இயக்கம் திமுக தான். அரசியல் அறிவே இல்லாமல் சில அட்டைகள் எவ்வளவு கத்தினாலும், உளறினாலும் களத்தில் வெற்றிப் பெறப்போவது திமுக தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+