சேர், பீரோ, குடம், பக்கெட்.. மேள தாளம் முழுங்க.. அரசு பள்ளிக்கு சீர் தந்த கிராம மக்கள்!
Recommended Video

விருதுநகர்: சேர், பீரோ, குடம், பக்கெட், சாக்பீஸ் என ஒரு பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க சீர் வரிசையாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதுனாராயனபுரம் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை மேல தாளங்கள் முழங்க சீர் வரிசையாக வழங்கினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் இணக்கமாக இருப்பதற்காக பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் கல்வி சீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சேதுனாராயனபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளியிலும் இந்த சீர் கிராம மக்கள் சார்பில் நேற்று வழங்கப்பட்டது. பள்ளி மற்றும் மாணவர்களுக்கு தேவையான பாத்திரங்கள், சேர், பீரோ, குடம், பக்கெட், சாக்பீஸ், பரீட்சை அட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மேள தாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பேரணியாக சென்று பள்ளியில் வழங்கினர். அப்போது பள்ளியின் நுழைவு வாயிலில் நின்றிருந்திருந்த ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த கல்வி சீரை பெற்றோர்கள் பள்ளிக்கு வழங்கினர்.












Click it and Unblock the Notifications