"அவர்" மாதிரியே.. வீடியோ காலில் "அந்த கோலத்தில்" நின்ற பாஜக நிர்வாகி.. அலறிய மாணவி.. பரபர விருதுநகர்
வீடியோ காலில் நிர்வாணமாக பேசி டார்ச்சர் தந்த பாஜக நிர்வாகி கைதானார்
விருதுநகர்: தன் காலேஜில் மாணவியிடம், நிர்வாணமாக வீடியோ காலில் நின்று பேசி, டார்ச்சர் தந்துள்ளார் பாஜக நிர்வாகி ஒருவர்.. இதையடுத்து இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் ஒரு தனியார் காலேஜ் செயல்பட்டு வருகிறது.. இதற்கு அரசு நர்சிங் கல்லூரி என்று பெயர்.
இந்த கல்லூரியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.. வெளியூர் மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிகளவில் படிக்கின்றனர். இந்த கல்லூரியில் டிஎம்எல்டி, கேட்டரிங் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பாஜக நிர்வாகி
இந்த கல்லூரியின் சேர்மன் பாஜக நிர்வாகி ஆவார்... முன்னாள் பாஜக சிறுபாண்மை பிரிவு மாவட்ட தலைவருமாகவும் இருந்துள்ளார். அவர் பெயர் தாஸ்வின் ஜான் கிரேஸ்.. இவர் தான் இந்த அசிங்கத்தில் சிக்கி உள்ளார்.. இந்த காலேஜில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, இவர் அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது, வீடியோ காலில் நிர்வாணமாக வந்து நின்றாராம்.. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இது குறித்து சக மாணவிகளிடம் தெரிவித்தார்...

வீடியோ கால்
இதனால், நடந்த விஷயத்தை தன்னுடைய தோழிகளிடம் சொல்லி அழுதுள்ளார் அந்த மாணவி.. மேலும் இந்த வீடியோ, இப்போது அந்த கல்லூரி மாணவிகள் மத்தியில் திடீரென பரவ ஆரம்பித்துவிட்டது.. இதை பார்த்து இன்று அதிர்ச்சி அடைந்த மாணவிகள், கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி, காலேஜுக்கு போகாமல், கேட் வாசலில் நின்று நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். திடீரென மாணவிகள் ஒன்று சேர்ந்து தர்ணா செய்யவும், போலீசார் விரைந்து வந்து, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..

சர்ட்டிபிகேட்கள்
அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.. ஆனால், உச்சக்கட்ட கொந்தளிப்பில் மாணவிகள் இருந்ததால், போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... சம்பந்தப்பட்ட சேர்மனை உடனே கைது செய்யுங்கள் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.. இதையடுத்து, சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை, நகர் போலீசார் கைது செய்தனர். ஆனால், அதற்கு பிறகும் மாணவிகள் சமாதானம் ஆகவில்லை.. காலேஜில் தங்கள் எதிர்காலம் குறித்தும், தங்களுடைய சர்ட்டிபிகேட்கள், இதுவரை தாங்கள் படிப்பதற்காக கட்டிய பணம், எல்லாவற்றையும் உடனடியாக திரும்பி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்..

கலெக்டர் எங்கே?
காலேஜில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் திடீரென உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அதற்குள் மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டு விட்டனர்.. அவர்களும் சேர்ந்து போராட்டம் செய்தனர். கலெக்டர், இங்கே இப்பவே வந்தாக வேண்டும், அப்பதான் சாலை மறியலை கைவிடுவோம் என்று முழங்கினார்கள்.. போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் எவ்வளவோ எடுத்து சொல்லியும், மாணவிகள் அந்த சமாதானத்தை ஏற்கவில்லை.. இன்னும் சாலை மறியலில்தான் ஈடுபட்டு வருகிறார்கள்..

தாஸ்வின் ஜான் கிரேஸ்
மறியல் போராட்டத்தால் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது... மற்றொருபக்கம், அதிகாரிகள் மாணவிகள், பெற்றோரிடம் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.. இப்போதைக்கு தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது... இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பும், பாஜக நிர்வாகி ஒருவர் ஆபாசமாக வீடியோ காலில் தோன்றி, பெண்ணிடம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications