தம்பி லீவு விட்டாச்சு.. போய் ஹோம் ஒர்க் பண்ணு.. மாணவனை தட்டி கொடுத்து கண்டிப்பையும் காட்டிய கலெக்டர்
விருதுநகர்: கனமழை பெய்வதை காரணம் காட்டி விடுமுறை கேட்ட பள்ளி மாணவருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கலகலப்பான பதிலை அளித்துள்ளார். இதை கேட்ட மாணவர்கள், "அப்பாடா, நல்லவேளை இவர் நமக்கு ஆசிரியராக இல்லை" என நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
வங்கக் கடலில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மிக பலத்த மழை பெய்யும் என 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் வானிலை மைய இயக்குநராக இருந்த ரமணனை மாணவர்கள் கொண்டாடினர். அவரது அறிவிப்புகளை உற்று நோக்கினர்.

பள்ளி மாணவர்கள்
தற்போது கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மாணவர்கள் விடுமுறையில் இருந்து வந்தார்கள். தற்போது கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி செல்கிறார்கள். ஆனாலும் மழை காலம் என வந்தவுடன் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் என்ற குஷி தொற்றிக் கொள்கிறது.

விருதுநகர் மாவட்டம்
இதற்கு சிறந்த ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. விருதுநகரை சேர்ந்த ஒரு மாணவர், சார் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்திருந்தார். இதை சுட்டிக் காட்டி மாணவர் ஒருவர் விருதுநகர் ஆட்சியருக்கு டிவிட்டர் மூலம் சார் விருதுநகரிலும் கனமழை பெய்து வருகிறது என கூறி விடுமுறையை அறிவிக்குமாறு மறைமுகமாக அந்த மாணவர் கேட்டிருந்தார்.
Recommended Video

விடுமுறைக்கு தொடர் பிரார்த்தனை
இதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி, விடுமுறைக்காக உங்கள் தொடர் பிரார்த்தனைகளுக்கு நன்றி, நம்முடைய மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26 ம் தேதி) மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப் பாடத்தை முடியுங்கள். ஆசிரியர்கள் அதை சரிபார்ப்பார்கள் . பாதுகாப்பாக இருங்கள் என பதில் தெரிவித்துள்ளார்.

ஜாலி ட்வீட்
ஏற்கெனவே ஒரு முறை இதே விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவர் ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார், அதற்கு அவர் நாளை உனது பெற்றோருடன் வந்து என்னை சந்திக்கவும் என ஜாலியாக பதில் அளித்ததும் மாணவர் அலறி அடித்து ஓடியதும் குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications