கலெக்டர் ஆபிஸ் போறீங்களா.. தமிழ்நாட்டிற்கே சூப்பர் தீர்வு.. அதிரடி காட்டிய விருதுநகர் கலெக்டர்
விருதுநகர்: கலெக்டர் ஆபிஸில் மனு கொடுக்க போகும் பலருக்கும் உள்ள பிரச்சனைக்கு சூப்பர் தீர்வினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உருவாக்கி உள்ளார். இதன் காரணமாக விருதுநகர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் திங்கள்கிழமை தோறும், நேரடியாக கலெக்டரிடமே மக்கள் குறைகளை மனுவாக தெரிவிக்கலாம். நிர்வாகம், போலீஸ், காவல், வேளாண்மை என எந்த பிரச்சனை என்றாலும் மாவட்ட கலெக்டரிடமே மனு அளிக்கலாம். அவர் குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விளக்கமும் கேட்பார். நிர்வாக ரீதியாக உடனே நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

ஒரு மாவட்டத்தில் கலெக்டர் தான் அனைத்து துறைகளுக்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்பதால் எந்ததுறையில் எந்த பிரச்சனை என்றாலும் அவரிடம் முறையிட்டு தீர்வு பெறலாம் என்பதற்காகவே ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாம்கள் நடக்கின்றன.இதில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதால் பலரும் திங்கள்கிழமை மனு கொடுக்க வருவார்கள்.
அப்படி வரும் பொதுமக்கள் பலர் தங்களின் குறைகளை பேப்பரில் மனுவாக எழுதி கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பார்கள். மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். அவர்களும் எந்த நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் மனுதாருக்கு தெரிவிப்பார்கள்.
ஆனால் கலெக்டர் ஆபிஸ்க்கு வரும் மக்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை என்னவென்றால், மனுவினை சரியாக எழுதி செல்வது தான். எழுதப்படிக்க தெரியாத பாமர மக்கள் பலர் மனுவை வெளியில் பணம் கொடுத்து எழுதும் நிலை தான் இருக்கிறது,
இந்நிலையில் கையில் காசு இல்லாத மக்கள் மனுவை எழுத பிறர் உதவியை நாடி அங்கும் இங்கும் அலைவதும் நடக்கிறது. இதை பார்த்த சில கலெக்டர்கள் பல்வேறு வழிகளில் தீர்வுகளை உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் சூப்பர் உத்தரவினை பிறப்பித்துள்ளார். கலெக்டர் ஆபிஸ்க்கு வரும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இலவசமாக மனுக்கள் எழுதி தர தனி இடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்படுத்தி உள்ளார்.
இங்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டு கொண்டதற்கு இணங்க பாரதி யுவகேந்திரா மற்றும் வேர்ல்ட் விசன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்புகள் இலவசமாக மனு எழுதி தரும் சேவையை தொடங்கி இருக்கின்றன. இதேபோல் தமிழகம் முழுவதும் இலவசமாக மனு எழுதும் நிலை வந்தால், பிரச்சனையுடன் வரும் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications