விருதுநகர் கிட்ட "கட்டைப்பை"யுடன் கேஷூவலாக கிளம்பிய கணவன்.. முகத்தில் சலனமேயில்லை.. ஆடிப்போன சிவகாசி
விருதுநகர்: விருதுநகர் சிவகாசியில் நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், இது தொடர்பான 2 வகையான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி மிரள வைத்து வருகிறது.. என்ன நடந்தது சிவகாசியில்?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் திருமலை குமரன்... இவர் கோவையில் உள்ள அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவருடைய மனைவி பெயர் ராஜலட்சுமி. அதே பகுதியில் உள்ள ராஜலட்சுமி ஒருவருடன் பழகி வந்ததாகவும், இதனால், தம்பதிக்குள் சமீபகாலமாகவே அடிக்கடி தகராறும், பிரச்சனையும் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கோவையில் இருந்து சிவகாசி வந்திருந்த திருமலை குமரன், மனைவியுடன் வழக்கம்போல வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கத்தியால் ராஜலட்சுமியை குத்தி கொன்றுவிட்டார்..
ராஜலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.. ஆனால், அதற்குள் திருமலைகுமரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிறகு, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது... விரைந்து வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த ராஜலட்சுமியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
சலனமே இல்லாமல் நடந்து போனார்
பிறகு, அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், மனைவியை கொன்றுவிட்டு, கொஞ்சமும் சலனமே இல்லாமல் அசால்ட்டாக, அங்கிருந்து போய் கொண்டிருந்தாராம் திருமலை குமரன்.. இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமலை குமரனை தேட ஆரம்பித்தனர். ஆனால், அதற்குள் அவரே நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார்.
திருமலை குமாருக்கு 37 வயதாகிறது.. ராஜலட்சுமிக்கு 27 வயதாகிறது.. திருமணமாகி 9 வருடங்கள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. கோயம்புத்துாரில் வேலை செய்வதால், 2 வாரத்துக்கு ஒருமுறைதான் சிவகாசிக்கு வந்து செல்வாராம் திருமலை குமார்.. அப்படித்தான், சமீபத்தில் சிவகாசிக்கு வந்திருந்தார்.
போனில் யார்கிட்ட பேசுறே
அப்போது ராஜலட்சுமி, போனில் யாருடனோ நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருந்தாராம்.. இதனால் கடுப்பான திருமலைகுமார், யாரிடம் போனில் பேசுகிறாய்? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.. ஏற்கனவே, மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால்தான், தம்பதிக்குள் தகராறு வந்தவண்ணம் இருந்தது.. இப்போது, சம்பவத்தன்று மனைவி போனில் பேசவும் திருமலை குமார் கடுப்பாகிவிட்டார்.. இதனால், நேற்று முன்தினம் காலை 11:45 மணியளவில் ராஜலட்சுமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
கொலை செய்துவிட்டு தப்பினாலும், எப்படியும் தன்னை போலீசார் பிடித்துவிடும் என்று நினைத்த திருமலைகுமார், நேற்று மாலை சாத்தூர் கோர்ட்டுக்கு சென்றார். நீதிமன்ற காவல் பணியில் இருந்த போலீசார் அவரிடம் என்ன ஏதென்று விசாரித்தபோதுதான், மனைவியை கொன்று விட்டு நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாக கூறியுள்ளார்.. உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையையும் துவங்கியிருக்கிறார்கள்.
கட்டைப்பையோடு போனாராம்
ராஜலட்சுமியை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்து கிளம்பி செல்லும்போது, திருமலைக்குமார் ஒரு கட்டைப்பையை கையில் வைத்துக் கொண்டு போனாராம்.. அவரை சாலையில் பார்த்த சிலர், "என்ன உங்க வீட்டுக்குள் அலறல் சத்தம் கேட்டதாமே" என்று கேட்டுள்ளார்கள்.. அதற்கு "ஒன்றுமில்லையே, ஒரு சத்தமுமில்லை.. ரயிலுக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன்" என்று தலையசைத்தபடியயே கேஷூவலாக சென்றிருக்கிறார்..
இதை அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர், தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். இதற்கு பிறகு சந்தேகத்தின் பேரில் திருமலை வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான், ராஜலட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு, போலீசுக்கு தகவல் தந்தார்.. இந்த வீடியோ காட்சியும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications