விருதுநகரில் ராதிகாவிற்கு வாய்ப்பு இல்லையா? விஜய பிரபாகரன் ஓட்டு சதவீதம் இதுதான்- தந்தி டிவி Exit poll
விருதுநகர்: 18 வது லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய தந்தி டிவியின் கருத்துக்கணிப்பின் முடிவில் விருதுநகரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூா் ஜெய்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு வேட்பாளரும் பெறும் வாக்கு சதவீதம் தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது.

நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி தந்தி டிவி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தொகுதி வாரியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாணிக்கம் தாகூா் 36 சதவீதம்,தேமுதிகவின் விஜய பிரபாகரன் 32சதவீதம், பாஜக சார்பாக ராதிகா சரத்குமார்க்கு 21 சதவீதமும் ஓட்டுகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications